புதன், 12 டிசம்பர், 2018

ம.பி.யில் காங்கிரஸ்: 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது

congress claims support of 121 mlas in madhya pradesh assemblySamayam Tamil : மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
114 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய அந்தக் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் 5 சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 109 தொகுதிகளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 தொகுதிகளும் கிடைத்தன. 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையாக 116 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் 114 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் மற்ற சுயேட்சை மற்றும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற முயற்சி எடுத்தது.


காங்கிரஸ் கட்சிக்கு தனது கட்சி ஆதரவு வழங்குவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். இதனால், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு காங்கிரஸுக்குக் கிடைத்தது. தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற 5 பேரும் ஆதரவு கூறினர்.

பாஜகவின் படுதோல்வியை தவிர்த்த சிவ்ராஜ் சிங் சௌகான்

இதன் மூலம் மொத்தம் 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இதனை முன்னிட்டு ஆளுநர் ஆனந்திபென்னைச் சந்தித்த மாநிலக் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர் என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சலுஜா தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக