செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஜெயலலிதா அப்போலோவில் உணவுக்காக மட்டும் 1.17 கோடியாம் .. மருத்துவ செலவு ரூ.6,85,69,584..


தினத்தந்தி : மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவின் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களில், அவருக்கான உணவு செலவு மட்டும் ரூ. 1.17 கோடி ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584 எனவும் அப்பல்லோ தெரிவித்துள்ளது.
 மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்.13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது, பின்னர் ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017- ஜூன் 15 ஆம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது எனவும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்னும் ரூ.44.46 லட்சம் தர வேண்டியுள்ளது எனவும் அறிக்கையில் தகவல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக