செவ்வாய், 4 டிசம்பர், 2018

10 வருடத்தில் 8000 அபார்ஷன்கள்.அபார்ட்மென்ட்டில் ரகசிய ரூம்... ஆனந்தி!

வெப்துனியா : திருவண்ணாமலை: படித்தது பிளஸ் 2!! செய்றது என்னவோ டாக்டர் வேலை.. அதான் குண்டர் சட்டமே பாயும் நிலைமை ஆயிடுச்சு!!
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்குதான் அந்த டுபாக்கூர் டாக்டர் ஆனந்தி பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு சென்றதையடுத்து விரைந்து வந்து அபார்ட்மென்ட்டை பார்த்தார்கள்.
அபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்ததை பார்த்ததும்தான் போலீசார் அதிர்ச்சி ஆனார்கள். விஷயம் ரொம்ப பெரிசு போல இருக்கே என்று தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அபார்ஷன் /> ஏற்கனவே கைதானவர் அப்போதுதான் அந்த டாக்டரை போலீசார் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள். அதாவது 2 முறை இதே போல பெண்களுக்கு அபார்ஷன் செய்த குற்றத்துக்காக கைதானவர் என்பது தெரிந்தது. 2016ம் ஆண்டு இப்படித்தான் அபார்ஷனுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள்.


9 பெண்கள்=  2 பேர் உடந்தை
ஒன்றல்ல, ரெண்டல்ல, 9 பெண்களையும் வரிசையாக படுக்க வைத்து மயக்க மருந்து கொடுத்து, பின்னர் ஆபத்தான நிலைக்கு சென்ற அவர்களை போலீசார் சென்று மீட்டு வந்தார்கள். தற்போதும் இப்படியே தன் வேலையை ஆரம்பித்துள்ளார் ஆனந்தி. அவருக்கு உடந்தையாக கணவன் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவகுமார் ஆகியோரை வளைத்து பிடித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக