புதன், 28 நவம்பர், 2018

வைகோ : கூட்டணி பிரச்சினைக்கு ஸ்டாலின் பதில் கூறிவிட்டார் - வைகோ பேட்டி

கூட்டணி பிரச்சினைக்கு ஸ்டாலின் பதில் கூறிவிட்டார் - வைகோ பேட்டி
dinamani :மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு தரும் என்பதின் மூலம், கூட்டணி பிரச்சினைக்கு ஸ்டாலின் பதில் கூறிவிட்டார் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.  கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதிலால், பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ செய்தியார்களிடம் கூறியதாவது:
மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு தரும் என்பதின் மூலம், கூட்டணி பிரச்சினைக்கு ஸ்டாலின் பதில் கூறிவிட்டார். 3 கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற வழக்கில் சிறையிலிருந்த மூவரை விடுவித்துள்ளார்கள்.
சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும். முற்றுகை போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திராவிடர் கழகத்துடன் இணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கும் கூட. 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் திமுக அணிதான் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக