செவ்வாய், 6 நவம்பர், 2018

திராவிடம் .. சமகால சினிமாவில் அது காணமல் போய்விட்டதா?

Image result for பராசக்தி படம்Ganesh Babu : சமீப ஆண்டுகளில் கம்யூனிசமும், அம்பேத்கரியமும் வெகுஜன மக்களுக்கான திரைப்படங்களில் பெயரளவுக்காகவாவது குறிப்பிடப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சமூகநீதிக்காகவும், பெண்விடுதலைக்காவும் இந்தியாவிலேயே மிகக் கூடுதலாக சாதித்தது திராவிட இயக்கம்/பெரியாரிய இயக்கம். ஆனால் சமகால சினிமாவில் அந்த இயக்கத்திற்கான இடம் எங்கே?
திராவிட இயக்கம் தோற்றது, தாங்கள் சாதித்தவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும், தங்களை brand செய்துக்கொள்வதிலும்தான் என்பதை ஊரறியும். ஆனால் அந்த இயக்கத்தின் பற்றாளர்களும், பயனீட்டாளர்களும் எங்கே? அவர்களுக்கு அந்தக் கடமை இல்லையா?
குறிப்பாக அரசியல் பிரச்சாரத்திற்கு சினிமா என்னும் கலைவடிவம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்ற அனைவரையும்விட திராவிட இயக்கம் நன்கு அறியும். அப்படியிருந்தும் இடையில் எங்கே சறுக்கினோம்?
சினிமாவில் மறைமுகமாக திராவிட இயக்கத்தின் மீது சேற்றை அள்ளிவீசவும், களங்கப்படுத்தவும் ஷங்கர், முருகதாஸ் உள்ளிட்ட எத்தனையோ காவிக் கொண்டைகள் உலவும்போது, நம்மை வாழவைத்த அந்த இயக்கத்தின் மீது பற்றுள்ள சினிமா படைப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பஞ்சம்?
அப்படி திராவிட இயக்கத்தையும், அதன் சமூகநீதி அரசியலையும் உள்வாங்கிய தரமான சில சினிமா படைப்பாளிகள் இருந்தும், அவர்கள் தங்கள் சினிமாக்களில் 'திராவிடம்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குக்கூட ஏன் இவ்வளவு தயங்குகிறார்கள்?

இத்தனைக்கும் மற்றத்துறைகளைப் போலவே பார்ப்பனீய ஆதிக்கத்தில் மூழ்கியிருந்த தமிழ் சினிமாத்துறையில், இன்று எளிய மனிதர்களும் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை என்று புகழின் உச்சத்தைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது திராவிட இயக்கம். இதையெல்லாம் மறக்குமளவுக்கு நன்றிக்கெட்டவர்களா இந்த தமிழ் சினிமாக் கலைஞர்கள்?
இறுதியாக...
கடந்த 50ஆண்டுக்கால தமிழ் சினிமாவில் "திராவிடம்" என்ற சொல்லை எந்தப் படத்திலாவது அதன் முழு அரசியல் தன்மையோடு பயன்படுத்தியிருக்கிறார்களா? 'ஆம்' என்றால் எந்தப் படத்தில்? 'இல்லை' என்றால் ஏன்?
(பி.கு: "ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது" என்றப் பாடல் வரிகளைச் சொல்லி யாரும் என்னிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டாம்)
-Ganesh Babu


600 × 450I

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக