வியாழன், 15 நவம்பர், 2018

அரைவேக்காட்டு பெண்ணியவாதிகளின் வடிவில் ஜெயலலிதா

Image may contain: 1 person, standingImage may contain: 2 people, people standingImage may contain: 5 people, people standingLR Jagadheesan : எம்ஜிஆர் இறப்புக்குப்பின் ஜெயலலிதாவின் ஆதரவாளராய் இருந்து பின் எதிர்ப்பாளராய் மாறி அவரை கடுமையாய் விமர்சித்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பின்னர் மீண்டும் ஜெயலலிதாவிடம் வர விரும்பி தூதனுப்பினார். அவர் குடும்பத்தோடு வந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டால் ஜெ அணியில் சேரலாம் என்று கூறப்பட்டது.
அவரும் மனைவியோடு ஜெயலலலிதாவை நேரில் சந்திக்க வந்தார். ஜெயலலிதாவை சந்திப்பதற்கு முன் அவரிடம் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் அவர் மனைவியும் ஜெயலலிதா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பொறியில் சிக்கிய எலியாக அவரும் அவர் மனைவியும் ஜெயலலிதா காலில் விழுந்து மன்னிப்புகேட்டனர். மூடிய அறைக்குள் நடந்த அந்த நிகழ்வு ஜெயலலிதாவின் ஆணைப்படி புகைப்படமாக எடுக்கப்பட்டு எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டது. மறுநாள் பத்திரிக்கைகளில் முதல்பக்க செய்தியானது.

முழுநேர அரசியல்வாதியான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை ஜெயலலிதா நடத்திய விதத்தைவிட அரசியலுக்குள் இல்லாத அவரது மனைவியையும் சேர்த்து அவமானப்படுத்திய அந்த செயல்தான் எதிர்காலத்தில் அவர் வளர்த்த ஆணவ அரசியலின் teaser.
அவரே ஒரு பெண்ணாக இருந்தும் அரசியலில் இல்லாத இன்னொரு பெண்ணை எந்த அளவுக்கு வன்மம் கொண்டு அவமதிப்பார் என்பதற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மனைவியும் அமிலவீச்சால் முகம் சிதைந்த ஐ ஏ எஸ் அதிகாரி சந்திரலேகாவுமே சாட்சிகள்.
காலில் விழும் கலாச்சாரத்தை ஜெயலலிதா கண்டுபிடிக்கவில்லைதான். ஆனால் அடுத்தவரை அவமதிப்பதற்கானகுரூரமான ஆயுதமாக கூர்தீட்டியவர் அவர் மட்டுமே. தனக்குப்பிடிக்காதவர்களை பொதுவெளியில் எவ்வளவுமோசமாக முடியுமோ அவ்வளவு மோசமாகவும் குரூரமாகவும் அவமதித்து மனம் மகிழ்வது ஜெயலலிதாவின் அடிப்படை குணம்.
வாய்பேசமுடியாத தமிழக முதல்வர் எம்ஜிஆரால் ஆட்சிசெய்யமுடியாது எனக்கு முடிசூட்டுங்கள் என்று அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியது முதல் ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினியின் மரணதண்டனையை ஆயுளாக குறைத்தபோது சோனியாவுக்கு பதிபக்தி இல்லை என்றதுவரை; தன் கைதுக்கு காரணமான நீதிபதி ஷிவப்பாவை நின்றமேனிக்கு பதவியில் இருந்து நீக்கியதுமுதல் தன் சொந்த ஆடிட்டரையே செறுப்பால் அடித்ததுவரை ஜெயலலிதா தன்னை எதிர்த்தவர்களுக்கு செய்த குரூரமான பொதுவெளி அவமானங்கள் ஒன்றா இரண்டா?
இவையெல்லாம் ஆளுமையின் அம்சங்கள் என்று விதந்தோதும் அரைவேக்காட்டு பெண்ணியவாதிகளின் வடிவில் ஜெயலலிதா நம்மிடையே இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். மறைந்துவிடவில்லை.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக