ஞாயிறு, 11 நவம்பர், 2018

சிஸ்டம், மையம், என்று வந்து இன்று அணில் குஞ்சு .. நச்சு விதைகள்

Mani Mathivannan : எதையும் பகுத்தறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாமல்,
ரசனையை மட்டுமே முதன்மையான மதிப்பீடாகக் கொண்டு, அந்த ரசனையின் முன் சுயமரியாதை உள்ளிட்ட விழுமியங்கள் அனைத்தையும் பலியிட்ட தலைமுறை ஒன்று எம்ஜிஆரிலிருந்து தொடங்கியது
தமிழ்நாட்டில். அக்கூட்டத்தை அப்படியே தன்னகப்படுத்தி ஜெயலலிதா சுவீகரித்துக் கொண்டார். அக்கூட்டம் அப்படியே இன்னும் நமக்கு அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கிறது.
அதே காம்பினேஷனில் புதிய பிராண்டுகள் சிஸ்டம், மையம், என்று வந்து இன்று அணில் குஞ்சு கூட்டமாக இருக்கிறது!
இருக்கும் தொந்தரவோடு சாதியை மட்டுமே விழுமியமாக முன்வைத்து, அதையே மூலதனமாக முன்வைத்து ஒரு கொள்ளைக் கூட்டம் தோன்றியது தொன்னூறுகளில். அதற்கும்ஏகப்பட்டபிராண்டுகள்;பிராஞ்சுகள்!
கூடவே எப்போதும் மனித விரோத நோக்கங்களுடன் கூடிய பார்ப்பனீயம் அதன் அழிப்பு, கொள்ளையிடுதல். தீ வைப்பு சித்தாந்தங்களுடன் வெறி கோண்டு அலைந்து கொண்டிருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக