செவ்வாய், 6 நவம்பர், 2018

மைத்திரி தரப்பு அமைச்சர் " மனுச" நாணயக்காரா பதவி ராஜினாமா .. சட்டவிரோத ஆட்சி என்று கூறியுள்ளார் ..

Manusha Nanayakkara a deputy Minister of the United People's Freedom Alliance (UPFA) government has resigned from his ministerial portfolio a short while ago.
NDTV :இலங்கை அரசியல் குழப்பம்  இலங்கையில் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாக  பிரச்சனைகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று தான் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் பிரதமர் பதவி கிடையாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜபக்ஷே தலைமையில் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.   இலங்கையில் இருக்கும் காலி மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்காரா தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.< தன்னுடைய ராஜினாமா கடிதத்தை இன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு அனுப்பியிருக்கிறார் மனுச நாணயக்காரா. அந்த கடிதத்தில் “சட்டவிரோதமாக அரசமைக்க முயலும் இந்த முரணான நடவடிக்கைகளுக்கு என்னால் துணை போக முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்காவிடில் ராஜபக்ஷேவிற்கு பிரதமர் பதவி கிடையாது என்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிகள் தங்களின் ஆதரவு ராஜபக்ஷேவிற்கு கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக