புதன், 21 நவம்பர், 2018

மீண்டும் ஒரு ஆணவ படுகொலை! கோனார் ... தேவர். ஜாதி காதல் ..நெல்லை அம்பாசமுத்திரம்

Prabaharan Muthu : மீண்டும் ஒரு ஆணவ படுகொலை... நெல்லை
,அம்பாசமுத்திரம் அருகே வெள்ளாங்குளியை சார்ந்த இசக்கி என்ற ’கோனார்’ சாதி இளைஞன், இவர் கூட்டுறவு வங்கியில் பணி புரிந்து வந்தார். அதே பகுதியை சார்ந்த தேவர் சமூக பெண்ணை 8வருடங்கள் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று அந்த பையன் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், தன் காதலன் கொலை செய்யப்பட்ட சோகம் தாளாமல், அந்த பெண் இன்று தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வருகிறது. #ஆணவ_கொலை தகவல் கருப்பர் கூட்டம் .. தீர்வுதான் என்ன? அரசும் சட்டமும் சாதியை ஆதரிக்கிறதா? ஆம் என்றால் தமிழர்களை இந்திய நாட்டிலிருந்து பிரித்து தனி நாடு வழங்குங்கள். எங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்கிறோம். சாதி மதம் அற்ற ஓர் இனக்குழு உருவாக்கப்பட வேண்டும். சாதிய கொலைக்கெதிராய் கடுமையான தனி சட்டம் வேண்டும். யார் செய்வார்களோ இதை??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக