ஞாயிறு, 18 நவம்பர், 2018

புதுகோட்டை போலீஸ் வெறியாட்டம் .. கதறி அழும் தாய்மார்களின் சாபங்களும், குழந்தைகளின் கதறல்களும்..

கலைஞர் பிறந்த வீடு
Palanivel Manickam : நாயை அடிப்பது போல் அடித்து சட்டையை கிழித்து இழுத்து
கைது செய்றானுங்க, வீடு வீடாக புகுந்து கதவையெல்லாம் உடைத்து லத்தியால் அடித்து இழுத்துட்டு வறானுங்க!!!
ஊருக்குள்ளயே விரட்டி விரட்டி அடித்து பிடித்து கைது செய்றானுங்க!!!
காரணம் அந்த மக்கள் தங்களுக்கு நிவாரணங்கள் வரவில்லை, அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் செய்ததன் விளைவு!!! சம்பவம் நடந்தது கொஞ்ச நேரம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில்!!!
அந்த பெண்களும், பெரியவர்களும் அப்படி கதறி அழுறாங்க, மனசாட்சியே இல்லாம போட்டு அடிக்கிறானுங்க!!! த்தா வீடுகளை, வாழ்வாதாரங்களை இழந்து நிற்பவர்களுக்கு சோறு தண்ணீர் கொடுப்பதெல்லாம் அரசின் கடமைதாண்டா,, அதை நீங்க கொடுக்கலைன்னா அவன் கேட்கத்தான் செய்வான்!!!
பசி, தாகத்தின் கொடுமைகளை அனுபவிப்பவனுக்குத்தான் அந்த வலியும் வேதனையும் புரியும்!!! காவல்துறை அதிகாரிகள் எல்லாம் காக்கி சட்டையை அணிந்து விட்டால் தங்களின் மனசாட்சிகளை கழட்டி வீட்டு கொள்ளைப் பக்கம் குழி தோண்டி புதைத்து விடுவார்கள் போல கொடுமை!!!

ஏற்கனவே சோறு தண்ணீர் இல்லாம நரக விளிம்பில் நிற்கிறார்களே அவர்களை நாயை அடிப்பது போல் அடிக்கிறோமே என்ற ஒரு சிறு உறுத்தல் கூடவா இல்லாமல் போய்விட்டது???
என்ன மனுஷன்யா நீங்க ச்சை.. அங்கு கதறி அழும் அத்தனை தாய்மார்களின் சாபங்களும், குழந்தைகளின் கதறல்களும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் அனைவரையும் நாசமாக்கியேத் தீரும் பாருங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக