அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் இன்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.< சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘96’ படத்தை, இன்று மாலை சன் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தது சன் டிவி.
அதற்குக் கீழே, இன்று மாலை 6 மணிக்கு ‘சர்கார்’ படத்தின் எச்.டி. பிரிண்ட்டை வெளியிடப்போவதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்தது.
அதனைத் தடுக்கும் விதமாக, திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. மேலும், படம் பார்க்க வருபவர்களைத் தீவிரமாகச் சோதனையிடுமாறு திரையரங்குகளுக்கும் தகவல் அனுப்பியது.
இன்னொரு புறம், ‘சர்கார்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் இதனைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியது. அத்துடன், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் படத்தை வெளியிட நீதிமன்றத் தடையையும் பெற்றது.
ஆனாலும், எல்லாவற்றையும் மீறி ‘சர்கார்’ படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அவர்கள் கூறியபடி இன்னும் எச்.டி. பிரிண்ட் வரவில்லை என்றாலும், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி தியேட்டரில் படம்பிடித்து, சட்டவிரோதமாக வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக