வியாழன், 29 நவம்பர், 2018

கனடா தமிழ் வழக்கறிஞர் பாலச்சந்திரன் போதை மருந்தால் உயிரழப்பு!

torontotamil.com: கனடா டொரோண்டோவில் Balachandran Law என்ற சட்ட
நிறுவனத்தை நடத்திவந்த இளம் தமிழ் வழக்கறிஞர் அகி பாலச்சந்திரன் (Aghi Balachandran) நேற்று மரணமடைந்தார்.
 மிக இளம் வயது தமிழ் குற்றவியல் வழக்கறிஞராக இவர் டொரோண்டோவில் தனது சேவையை ஆற்றி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இவருடைய மறைவையொற்றி பல்வேறு செய்திகள் வந்த நிலையில், அகி பாலச்சந்திரன் அதிகரித்த fentanyl பாவனையால் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக Toronto Sun இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (Nov 17, 2018) இரவு 8:20 PM மணியளவில் Queen-Dufferin Sts தொடர் மாடி குடியிருப்பில் இருந்து போலீசாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் அங்கு சென்ற போலீசார் அதிகளவு fentanyl உட்க்கொண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த மூவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்திலேயே 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இறந்துவிட்டனர். உயிருக்காக போராடிக்கொண்டிருந்த அகி பாலச்சந்திரன் 4 நாட்கள் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த மற்றைய இருவரின் பெயர், விபரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. ஃபெண்டனில் (fentanyl) என்பது ஒரு வலிமையான செயற்கை வலி நிவாரணியாகும்.

இதை மக்கள் போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர். இது மோர்ஃபினுக்கு (morphine) ஒத்திருக்கிறது, ஆனால் கோகோயின் (cocaine) அல்லது ஹெராயினை (heroin) விட 100 மடங்கு அதிக வலிமையான மற்றும் வலுவானதாகவும் இருக்கிறது. கோகோயின் (cocaine) போன்ற அதிக விலையுயர்ந்த பொழுதுபோக்கு  போதை மருந்துகளுக்கு ஈடாக இது போதைக்காக பயன்படுத்தப்படுகின்றது.

Fentanyl மிகவும் ஆபத்தானது மற்றும் அடிக்கடி இறப்புகளை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது கனடாவில் மக்கள் பாவனைக்கு அரசினால் தடை செய்யப்பட்ட மருந்தாகும். அதிகரித்துவரும் அளவுக்கு அதிகமான ஓபியோட் பாவனையால் இதுவரை டொரோண்டோவில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த August 13 முதல் இன்றுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர் என டொரோண்டோ பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றது. தொடர்புடைய செய்தி https://torontosun.com/news/crime/fentanyl-kills-promising-young-lawyer


கனடா டொரோண்டோவில் Balachandran Law என்ற சட்ட நிறுவனத்தை நடத்திவந்த இளம் தமிழ் வழக்கறிஞர் அகி பாலச்சந்திரன் (Aghi Balachandran) நேற்று மரணமடைந்தார்.
மிக இளம் வயது தமிழ் குற்றவியல் வழக்கறிஞராக இவர் டொரோண்டோவில் தனது சேவையை ஆற்றி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இவருடைய மறைவையொற்றி பல்வேறு செய்திகள் வந்த நிலையில், அகி பாலச்சந்திரன் அதிகரித்த fentanyl பாவனையால் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக Toronto Sun இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (Nov 17, 2018) இரவு 8:20 PM மணியளவில் Queen-Dufferin Sts தொடர் மாடி குடியிருப்பில் இருந்து போலீசாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் அங்கு சென்ற போலீசார் அதிகளவு fentanyl உட்க்கொண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த மூவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
எனினும் சம்பவ இடத்திலேயே 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இறந்துவிட்டனர். உயிருக்காக போராடிக்கொண்டிருந்த அகி பாலச்சந்திரன் 4 நாட்கள் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்த மற்றைய இருவரின் பெயர், விபரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.
ஃபெண்டனில் (fentanyl) என்பது ஒரு வலிமையான செயற்கை வலி நிவாரணியாகும். இதை மக்கள் போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இது மோர்ஃபினுக்கு (morphine) ஒத்திருக்கிறது, ஆனால் கோகோயின் (cocaine) அல்லது ஹெராயினை (heroin) விட 100 மடங்கு அதிக வலிமையான மற்றும் வலுவானதாகவும் இருக்கிறது.
கோகோயின் (cocaine) போன்ற அதிக விலையுயர்ந்த பொழுதுபோக்கு போதை மருந்துகளுக்கு ஈடாக இது போதைக்காக பயன்படுத்தப்படுகின்றது.
Fentanyl மிகவும் ஆபத்தானது மற்றும் அடிக்கடி இறப்புகளை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது கனடாவில் மக்கள் பாவனைக்கு அரசினால் தடை செய்யப்பட்ட மருந்தாகும்.
அதிகரித்துவரும் அளவுக்கு அதிகமான ஓபியோட் பாவனையால் இதுவரை டொரோண்டோவில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கடந்த August 13 முதல் இன்றுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர் என டொரோண்டோ பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றது.
தொடர்புடைய செய்தி
https://torontosun.com/news/crime/fentanyl-kills-promising-young-lawyer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக