திங்கள், 26 நவம்பர், 2018

கஜா புயல் . எடப்பாடி மீது பழி போட்டு தப்பிக்க திட்டம் போடும் பலே அமைச்சர்கள் ..


மின்னம்பலம்:  “அமைச்சர்கள் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட
டெல்டா மாவட்டங்களில் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை கவனித்து வருகிறார்கள். அமைச்சர் ஜெயகுமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடிக்கு அருகே உள்ள பிள்ளையார் திடல் என்ற இடத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த தகவல் என் மூலமாக ஜெயகுமார் ஆதரவாளர்கள் வீடியோ மற்றும் படங்களாக பரப்பினார்கள். முதல்வர் பார்வைக்கும் இந்தப் படங்கள் போனது. என்ன நினைத்தாரோ முதல்வர், உடனடியாக அமைச்சர்கள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
‘நீங்க அங்கே களத்தில் இருந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவதெல்லாம் சிறப்பாக இருக்கு. அது தொடர்பாக படங்கள் இருந்தால் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலமாகவே வெளியிடலாம். தப்பே இல்லை. ஆனால், நிவாரணப் பொருட்கள் கொடுப்பதையோ, அவங்களுக்கு உணவு கொடுப்பதையோ படம் எடுக்கவே வேண்டாம்னு நினைக்கிறேன். நாம போட்டோ எடுக்கிறோம், வீடியோ எடுக்கிறோம்னு தெரிஞ்சா அந்த மக்கள் கைநீட்டி வாங்க கூச்சப்படுவாங்க. அவங்க இடத்துல இருந்து நீங்க யோசிச்சிப் பாருங்க.
இவ்வளவு நாளா அவங்கதான் எல்லோருக்கும் சாப்பாடு போட்டுருப்பாங்க.
இப்போ ஒரு வேளை சாப்பாட்டுக்கு கையேந்தி நிற்கிறோமே என்ற ஆதங்கம் அவங்க மனசுக்குள்ள இருக்கும். நாம கையேந்தி நிற்பது நாளைக்கு
போட்டோவுல வந்துட்டா என்ன செய்யுறது என்ற எண்ணம் அவங்களுக்குள் இருக்கும்.
அதனாலேயே பலரும் வராமல் இருப்பாங்க. அதானால நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி முடிஞ்ச வரைக்கும் அந்த மக்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதை மட்டும் படம் எடுக்க வேண்டாம்னு சொல்லுங்க...’ என்று சொன்னாராம். முதல்வரின் இந்த உத்தரவு எல்லா அமைச்சர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் திண்ணை: முதல்வர் மீது கோபத்தில் அமைச்சர்கள்!அதைக் கேட்ட ஒரு அமைச்சர், ‘ அவரு ஒரு நாளுதான் வந்தாரு. வந்ததும் நிவாரணம் கொடுக்கிறேன்னு சொல்லி ரெண்டு பையை மக்களுக்கு கொடுத்துட்டு அதை போட்டோ எடுத்துகிட்டுதானே போனாரு... அவருக்கு ஒரு நீதி நமக்கொரு நீதியா? திட்டு வாங்குறதெல்லாம் நாம வாங்கணும். பாராட்டு எல்லாம் அவருக்கு மட்டும் கிடைக்கணும்னு நினைக்கிறாரா? சரி அடுத்த தடவை அவரு இங்கே வரும்போது, யாருக்காவது நிவாரணம் கொடுக்கும் போது போட்டோ எடுத்துக்குறாரா இல்லை, வேண்டாம்னு பெருந்தன்மையா போறாரான்னு பார்க்கிறேன்...’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.
இன்னொரு அமைச்சரோ, ‘படம் எடுத்து விளம்பரம் தேடிக்க நான் என்ன அவரு மாதிரி போட்டோகிராபரை கூடவா கூட்டிட்டுப் போறேன். நான் கொடுக்கிறதை யாரோ எடுத்துப் போட்டுறாங்க. அதையெல்லாம் நாங்க பார்த்துட்டு இருக்க முடியுமா? ராத்திரி வந்து தூங்குறதுக்கு 12 மணி ஆகிடுது. காலையில 5 மணிக்கெல்லாம் எழுப்பிடுறாங்க. போன் நெம்பரை எல்லாம் பேப்பர்ல போட்டு விடச் சொல்லிட்டாரு. ராத்திரி 2 ரெண்டு மணிக்கெல்லாம் போன் வருது. எடுக்காமலும் இருக்க முடியலை. இதெல்லாம் அவருக்கு தெரியுமான்னு கேட்கணும்’ என்று தகவல் சொன்னவரிடம் புலம்பித் தீர்த்துவிட்டாராம்.
தென் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரோ, ‘அவரை இங்கே வரச் சொல்லி எத்தனையோ முறை சொல்லியாச்சு. ஊருல எல்லோரும் திட்டிட்டு இருக்காங்க. ஆனாலும் அவரு இன்னும் இங்கே வரவே மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இருக்காரு. நமக்கு மட்டும் இதை பண்னாதே... அதைப் பண்ணாதேன்னு அங்கே உட்கார்ந்து சொல்லிட்டு இருக்காரு. புதுக்கோட்டையில இன்னைக்கு ஒரு விவசாயி தற்கொலை பண்ணிக்கிட்டாரு. அங்கேல்லாம் எவ்வளவு சென்ஷேனலா இருக்கு. அங்கெல்லாம் முதல்வர் நேரா வந்து ஆறுதல் சொல்லி இருக்கணும். பிரச்சினைகள் சமாளிக்கிற அளவுதான் இருக்கு வாங்கண்ணு சொல்லியும் அவரு, நாங்க சொல்றதை கேட்காமல் உளவுத் துறை சொல்றதை மட்டுமே கேட்டுகிட்டு இருக்காரு. மக்கள்கிட்ட நமக்கு நல்ல பேரு வாங்க கிடைச்ச பெரிய வாய்ப்பை கோட்டை விட்டுட்டு உட்கார்ந்திருக்காரு... ’ என்று கோபத்துடன் சொல்லி இருக்கிறார். ” என்று முடிந்தது அந்த நீண்ட மெசேஜ்.
“அமைச்சர்களுக்குள் இவ்வளவு கோபம் இருக்கா?” என்ற கேள்வி ஃபேஸ்புக்கில் இருந்து வந்தது.
“இருக்காதா பின்ன... 10 நாள் ஆகப் போகுது. துணை முதல்வர் சொல்லியும், வரேன்னு அவருகிட்ட சொல்லியும் வராமல் சென்னையில் உட்கார்ந்துட்டு இருக்காரு. இந்த வாரம் மட்டும் முதல்வர் சேலத்துக்குப் போயிருந்தால், அமைச்சர்கள் இன்னும் கொந்தளிச்சு இருப்பாங்க. நல்ல வேளையாக சென்னையிலேயே உட்கார்ந்திருக்காரு. இப்போ அமைச்சர்களுக்குள் இருக்கும் இந்த கோபம், இப்படியே விட்டால் வெடித்துக் கிளம்பி நேரடியாக முதல்வரிடமே அவர்கள் காட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் டெல்டாவுக்கு நாளை ரயில் மூலம் கிளம்புவதாக அறிவித்திருக்கிறார். ஹெலிகாப்டர் பயணத்திற்கு விமர்சனம் வந்ததால் இம்முறை திருச்சி வரையிலான விமானப் பயணத்தைக் கூடத் தவிர்த்துவிட்டு ரயில் பயணமாகவே திருவாரூர் செல்கிறார் முதல்வர்” என்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக