செவ்வாய், 13 நவம்பர், 2018

காடுவெட்டி குருவின் மகன்! : அம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர்

tamil.indianexpress.com :தாயைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும் படி பா.ம.க. நிறுவனர் ராமதாசை கேட்டுக் கொண்டுள்ளார். வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் தனது தாயை கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் ராமதாஸுக்கு வேண்டுகோள் வைத்து அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ம.க.வின் அச்சாணியாக கருதப்படும் வன்னியர் சங்கத்தின் தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அக்கட்சியினராலும் வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காடுவெட்டி குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, காடுவெட்டி குரு சில மாதங்களுக்கு முன்னர் காலமானார்.
</ இந்நிலையில் காடுவெட்டி குருவின் குடும்பத்தாருக்கு வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகையால் வாகனத்தை விற்க உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர்.
இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், பா.ம.க. தரப்பில் இருந்து காடுவெட்டி குரு குடும்பத்துக்கு உதவப்போவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குருவின் மனைவியான லதா கையெழுத்திட்ட ஒரு கடிதம் அண்மையில் வெளியானது. அதில் தனது கணவரின் குடும்பத்தினர் சொத்தை அபகரிக்க திட்டம் போடுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குரு – லதா தம்பதியரின் மகன் கனலயரசன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ”எல்லாருக்குமே தெரியும் எனது தந்தை இறந்ததில் இருந்து எங்க அம்மா மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்று சென்னையில் உள்ள அவரது பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.
ஆனால் தற்போது வரை அவரை என்னிடம் பேச விடாமல் உறவினர்கள் தடுக்கிறார்கள். என் தாயின் இருப்பிடமும் எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ள கனலரசன், தாயைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும் படி பா.ம.க. நிறுவனர் ராமதாசை கேட்டுக் கொண்டுள்ளார். இச்செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக