திங்கள், 26 நவம்பர், 2018

சுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து பெண் தர்சிகா கிருஷ்ணானந்தம் வெற்றி பெற்றுள்ளார்

46495209_1367972656672909_5303978826068393984_n  சுவிஸ் தூண் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட  ஈழத்துபபெண்   தர்சிகா கிருஷ்ணாநந்தம் வடிவேலு  வெற்றிபெற்றுள்ளார்!! 46495209 1367972656672909 5303978826068393984 n1
வீரகேசரி :சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான “எஸ்.பி” கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார். 2014 ஆண்டு நடந்த தேர்தலில் 2003 ஓட்டுகள் பெற்றார், நேற்று நடந்த தேர்தலில், 2916 ஓட்டுகள் பெற்று மிக வெற்றிவாகை சூடினார். சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப்பெண் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். யாழ். புங்குடுதீவில் பிறந்து சிறுவயதிலேயே சுவிஸ் வந்து இங்கு படித்து பட்டம் பெற்று, தற்போது சுவிஸின் “எஸ்.பி” எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.
;சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.</>இவரது வெற்றி, சுவிஸில் அரசியலில் பிரகாசித்து வரும் தமிழ் இளையோருக்கு, மற்றுமோர் எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது. இவரது வெற்றி குறித்து  இவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது,
சுவிஸ் தூண் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட  ஈழத்துபபெண்   தர்சிகா கிருஷ்ணாநந்தம் வடிவேலு  வெற்றிபெற்றுள்ளார்!!எனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றியென” தெரிவித்து உள்ளதுடன், “என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எப்போதும் நான் வீணாக்க மாட்டேன் என்பதுடன், எப்போதும் போன்று சோஷலிசமான சிந்தனைகளுடன், நடுத்தர குடும்பங்களின் தேவைகளுக்கும், பாடசாலை மாணவர்களின் கல்வி சம்பந்தமான விடயங்களுக்கும், மற்றும் பெண்களுடைய முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபடுவேன் என உறுதி தருவதுடன், இந்த தூண் நகரத்தை மென்மேலும் இடதுசாரி சிந்தனைகளுடன் முன்னேற்றுவேன்”
எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக