செவ்வாய், 27 நவம்பர், 2018

போலீசே நடத்திய பாலியல் தொழில் .. தலைமைக்காவலர் பார்த்திபன் கைது .. சென்னை கோயம்பேடு நிலைய..

policeதினத்தந்தி : சென்னையில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த தலைமைக்காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தக்கரை என்.எஸ்.கே நகர் 2வது தெருவை சேர்ந்த பெண் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, நபர் ஒருவர் எனது வீட்டிற்குள் நுழைந்து தனது பர்ஸை திருடியதாகவும், அவனை மடக்கிப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினார்.
;இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீஸார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் அந்த பெண் தான் தம்மை பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது அங்கே வந்த காவலர் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்து சென்றதாகவும் கூறினார்.;

இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமானது.
சென்னை கோயம்பேடு காவல் நிலைய தலைமைக் காவலரான பார்த்திபன், பாலியல் தொழில் செய்யும் அந்த பெண்ணை அமைந்தகரையில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அந்த பெண்ணும் வாடிக்கையாளர்களை தமது வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருக்கும் போது அங்கே வரும் காவலர் பார்த்திபன் அந்த நபரை மிரட்டி பணம் பறிப்பார். இதையே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.<;">இதனையடுத்து போலீஸார் அந்த காவலரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக