திங்கள், 26 நவம்பர், 2018

மதுபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கிய ரகுராம் காயத்திரி!!

car நக்கீரன் : மதுபோதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.< நேற்று இரவு சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரை ஓட்டிவந்தவர் நடிகை காயத்திரி ரகுமான் என தெரியவந்தது, மேலும் அவர் மது போதையில் காரை இயங்கிவந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காயத்ரி ரகுராம் இறுதியில் தான் மது போதையில் காரை இயக்கியதை ஒப்புக்கொண்டார்.

அதன்பின்  மது போதையில் கார் ஒட்டியதற்கும், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும் 3500 ரூபாய் அபராதம் வசூல் செய்தனர். மேலும் அவர் போதையில் இருந்ததால் போலீசார் ஒருவரை அவரது காருக்கு டிரைவராக அமர்த்தி அவரை வீடுவரை கொண்டு சென்று விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக