திங்கள், 26 நவம்பர், 2018

சென்னை மூட்டை மூட்டையாக விசப்பட்ட ரூபாய் நோட்டுகள் .. புழல் ஏரியில் பழைய ரூபாய் நோட்டுக்கள்

noteவெப்துனியா : புழல் ஏரியில் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை புழல் ஏரி அருகே இன்று சில மூட்டைகள் குவியலாக காணப்பட்டது. இதனைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. இவ்வாறு 25 மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை கைப்பற்றிய போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக