வியாழன், 29 நவம்பர், 2018

சென்னை நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை

காலைல வரேன் tamil.oneindia.com-/hemavandhana :சென்னை: இளம் தமிழ் திரைப்பட நடிகை ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 வயதான நடிகை ரியாமிகா. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். தனது தம்பி பிரகாஷ் துணையுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். ரியாமியாக தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

உச்சக்கட்ட விரக்தி

பின்பக்க ஜன்னல்

இந்நிலையில் ரியாமிகாவின் ரூம் கதவு ரொம்ப நேரம் திறக்கப்படவே இல்லை. அதனால் தினேஷும், பிரகாஷும், கதவை தட்டி கொண்டே இருந்தார்கள். திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த இவர்கள், வீட்டின் பின்பக்கமாக சென்று ரூம் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்கள்.


தூக்கில் தொங்கினார்

அப்போது ரியாமிகா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறிந்து வளசரவாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் ஓரளவு உண்மை தெரியவந்துள்ளது.


காலைல வரேன்

ரியாமிகா நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு விரக்தியுடன் திரும்பி இருக்கிறார். பிறகு தினேஷை பார்க்க வேண்டும் என்று செல்போனில் அழைத்திருக்கிறார். ஆனால் நடுராத்திரி என்பதால் தினேஷ், "இப்போ மிட் நைட் ஆயிடுச்சு, காலைல வரேன்" என்று சொல்லி இருக்கிறார். பிறகு நேற்றுகாலை தினேஷ் ரியாமிகாவை பார்க்க வரும்போதுதான கதவு திறக்கப்படாமல் இருந்ததை கண்டறிந்தனர்.


மன உளைச்சல்

தினேஷூடன் ரியாமிகாவுக்கு நிறைய பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பட வாய்ப்புகளும் சரியாக வரவில்லை. இதுதான் அவருக்கு பெரிய மனஉளைச்சலில் கொண்டு போய் விட்டிருக்கிறது. ஏனென்றால் ரியாமியா குடும்பம் ரொம்ப ஏழ்மையான பின்னணியை கொண்டது.


உச்சக்கட்ட விரக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக