வியாழன், 8 நவம்பர், 2018

மெரீனா கொலை ,,விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை கொன்ற ஆட்டோ டிரைவர்கள்..

போதையில் இருந்த நாங்கள் பக்கத்திலிருந்த பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடிச்சோம். அவள் வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி போட்டோம். ஆனா தலையில அடிச்சப்பவே அவள் இறந்துட்டாள். அவள் உடலை எங்க தூக்கிட்டு போறதுன்னு தெரியல. எங்க கொண்டு போனாலும் மாட்டிப்போம்னு நினைச்சு அங்கயே கொஞ்சமா குழியை தூண்டி உடலை போட்டோம். எங்களுக்கு இருந்த பயம், பதட்டத்தில் குழியை ரொம்ப ஆழமா வெட்டாம விட்டுட்டோம். அதான் இப்படி மாட்டிக்கிட்டோம்"
tamil.oneindia.com - hemavandhana. :சென்னை: விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட போட்டியும், பொறாமையும்தான் என தெரியவந்துள்ளது.
பீச்சில் உள்ள நீச்சல் குளம் அருகில் மிக மிக கொடூரமான முறையில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். பீர் பாட்டிலை அடித்து பெண்ணின் பிறப்புறுப்பில் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட போலீசார், கண்டிப்பாக செக்ஸ் தகராறில்தான் இந்த கொலை நடந்திருக்கும் என்று தெரிவித்தனர்.
விபச்சார போட்டி.. முதல்கட்ட விசாரணையில் 35 வயதுடைய இந்த பெண் மதுரையை சேர்ந்த கலைச்செல்வி என்றும் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் என்றும் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் செல்போனை கொண்டு அடுத்தடுத்த விசாரணையில் போலீசார் இறங்கினர். கலைச்செல்வி, புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு சென்னை வந்து 2 மாதமாகிறதாம்.

 பாலியல் தொழில் செய்வதால் எப்பவுமே பீச் பக்கமே சுற்றி கொண்டு இருந்திருக்கிறார். யார் கொலையாளி? அந்த சமயங்களில்தான் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதனையடுத்து மறுநாளே வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2 நாளாக துருவி துருவி விசாரணை நடத்தி வந்தாலும் இவர்கள்தான் கொலையாளி என்று உடனடியாக சொல்ல முடியவில்லை.

வாக்குமூலம் தற்போது தீவிர விசாரணைக்கு பிறகு டிரைவர் பிரேம்குமாரும், அவரது நண்பர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்பவரும்தான் இவ்வளவு கோரமான கொலையை செய்தது என்று தெரியவந்துள்ளது. தற்போது எதற்காக கலைச்செல்வியை கொலை செய்தீர்கள் என போலீசார் விசாரித்தபோது, பிரேம்குமார் அளித்த வாக்குமூலம்தான் இது:
 மற்றொரு பெண் கலைச்செல்வி மதுரையிலிருந்து கிளம்பி மெரினாவுக்கு விபச்சாரம் செய்ய அடிக்கடி வந்து போவாள். அப்படி வரும்போதெல்லாம் எங்களைதான் அழைப்பாள். கலைச்செல்வியுடன் நாங்கள் தொடர்ந்து பழக்கம் வைத்து கொண்டோம். அப்போது கலைச்செல்வியுடன் மற்றொரு பெண் கூடவே வந்தாள். அவளை எங்களுக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. தொழில் போட்டி அதனால் ரொம்ப நெருக்கமாயிட்டோம். அப்போது ஒருநாள், "கலைச்செல்வி மதுரையிலிருந்து எப்ப சென்னை வந்தாலும், என் விபச்சார தொழில் கெட்டு போகுது" என்று புலம்புவாள்.

இதனால் நாங்கள் கலைச்செல்வியுடனான தொடர்பை கட் பண்ணிட்டோம். ஆனால் போன சனிக்கிழமை ராத்திரி பீச்சுக்கு வந்த கலைச்செல்வி வழக்கம்போல எங்களை கூப்பிட்டாள். நாங்களும் போனோம். எல்லோருமா சேர்ந்து ஒன்னா தண்ணி அடிச்சோம். அப்புறம் எல்லாருமே ஜாலியா இருந்தோம். பீர் பாட்டிலால் அடிச்சோம் பிறகு, ஏன் என்கிட்ட முன்னமாதிரி இருப்பதில்லை என்று பேச்சை ஆரம்பிச்சாள் கலைச்செல்வி. நாங்கள் ஏதேதோ காரணம் சொன்னோம். ஆனால் விடாப்பிடியாக இதையே கேட்டு கேட்டு தொந்தரவு பண்ணினாள்.

ஏற்கனவே போதையில் இருந்த நாங்கள் பக்கத்திலிருந்த பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடிச்சோம்.
அவள் வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி போட்டோம். ஆனா தலையில அடிச்சப்பவே அவள் இறந்துட்டாள். அவள் உடலை எங்க தூக்கிட்டு போறதுன்னு தெரியல. எங்க கொண்டு போனாலும் மாட்டிப்போம்னு நினைச்சு அங்கயே கொஞ்சமா குழியை தூண்டி உடலை போட்டோம். எங்களுக்கு இருந்த பயம், பதட்டத்தில் குழியை ரொம்ப ஆழமா வெட்டாம விட்டுட்டோம். அதான் இப்படி மாட்டிக்கிட்டோம்" என்றனர். இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக