தினமலர் : சென்னையில் இடியுடன் கனமழை
சென்னை: 'கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள 'கஜா' புயல் இன்று கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,, வளசரவாக்கம்,போரூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
கஜா' புயல் கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு, புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 15ம் தேதியன்று (இன்று) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக