tamil.indianexpress.com : "தமிழீழம் சிவக்கிறது" என்கிற நூலை 1993-ம் ஆண்டு பழ.நெடுமாறன் அச்சிட்டு வெளியிட்டார்.<
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய “தமிழீழம்
சிவக்கிறது” என்கிற புத்தகத்தை அழித்துவிட சென்னை உயர்நீதிமன்றம் இன்று
உத்தரவிட்டுள்ளது.
தமிழீழத்தின்
போராட்ட வரலாறு, 1989 காலகட்ட ஈழப் போர் நிலவரம் ஆகியவற்றை அடிப்படையாக
வைத்து ஒரு வரலாற்று பதிவாய் “தமிழீழம் சிவக்கிறது” என்கிற நூலை 1993-ம்
ஆண்டு பழ.நெடுமாறன் அச்சிட்டு வெளியிட்டார்.
அவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்தவுடன் 2002-ம் ஆண்டு இந்நூலை மீண்டும் வெளியிடுவதற்கு பழ.நெடுமாறன் முயற்சித்தார். ஆனால் ஏப்ரல் 2002ல், நூல் வெளியிட முயற்சித்ததற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டு, அவரது நூல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
2006-ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் அவர் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து தன்னிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்த புத்தகங்களை திரும்ப தரக் கோரி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடுத்தார். புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று நெடுமாறனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் செய்தார். வெளிநாடுகளுக்கு இப்புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், 2006-ல் வழக்கு வாபஸ் பெற்ற பின்னரும் காவல்துறையின் பிடியில் தன் புத்தகங்கள் இருப்பதால் எந்த பயனும் இல்லை எனவும் பழநெடுமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு முன்வைத்த எதிர் வாதத்தில், “இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், ராஜீவ் காந்திக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் புத்தகத்தில் கருத்துக்கள் உள்ளன. இதை அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும் எனவேதான் கீழமை நீதிபதி இப்புத்தகங்களை திரும்பி வழங்க மறுத்து விட்டார். பழ.நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் இன்று தீர்ப்பளித்தார். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதால் பழ.நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி காவல்துறையின் பாதுகாப்பில் உள்ள “தமிழீழம் சிவக்கிறது” புத்தகங்களை அழித்துவிடவும் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக