புதன், 28 நவம்பர், 2018

நீலகிரி ..யானை வழித்தட ஆக்கிரமிப்புக்களை அகற்றும் ஆட்சியர் திவ்யாவை இடமாற்ற . எடப்பாடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது!மின்னம்பலம் :
யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஈடுபட்டு வருவதால், மறு உத்தரவு வரும்வரை அவரை இடமாற்றம் செய்யக்கூடாது எனத் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடமாக அறியப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் வனப்பகுதியில் விதிமுறைகளைமீறித் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற நீதிமன்றம்உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என்று 50க்கும் மேற்பட்டோர்உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பி.லோகூர் அமர்வு, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் யானை வழித்தடத்தில்உரிய அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ரிசார்ட்கள், ஹோட்டல்களை முழுமையாக அகற்றவேண்டுமென்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நீலகிரி வழித்தடங்களில் உள்ள 49 சொகுசு விடுதிகளுக்குச்சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின்படி, 49 விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்த கட்டடங்களையும் மூடினார் மாவட்டஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. ஆட்சியரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் வந்தன. இந்த வழக்கு மீண்டும் இன்று (நவம்பர் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை வழித்தடத்தில் உள்ளவிதிமீறல் கட்டடங்களை அகற்றும் பணியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஈடுபட்டுவருகிறார்.
அவர் தொடர்ச்சியாக இது போன்ற கட்டடங்களைக் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார். ஒருவரே இப்பணியில்தொடர்ந்து ஈடுபட்டால்தான் இப்பணியைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் அவரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பல்வேறுபணிகளைச் செய்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை ஆட்சியரை வேறு எங்கும் இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விரிவான விசாரணையை வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக