வியாழன், 8 நவம்பர், 2018

நான் ஜனாதிபதியை ஒருபோதும் பழி வாங்க மாட்டேன் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா .

Ajeevan Veer : இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியுற்றால் தன்னால் ரணிலோடு தொடர்ந்து வேலை செய்ய முடியாது என சிரிசேன சொன்னவை பகிரப்பட்டிருந்தன.
No automatic alt text available.அதன் அர்தத்தை விளங்கிக் கொண்ட ரணில் மனோவை அழைத்து " தான் ஒருபோதும் ஜனாதிபதியையோ அல்லது அவரது குழுவையோ பழி வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்தோடு தனது அரசியலானது மகாத்மா குணங்களை கொண்டதென்றும் அதற்குள் பழி வாங்கும் சிந்தனைகள் இல்லை என மனோ கணேசன் மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் படி சொல்லியுள்ளார்.
ஒரு பிழையை மறைப்பதற்காக மேலதிக தவறுகளை செய்யாது, கடந்து போனவற்றை மறந்து இணைந்து இந்த பிரச்சனைகளை சுமூகமாக்க முயல வேண்டும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் எப்படி முடிவுக்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.< ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று

முப்படை தளபதிகள் சமூகமளிக்கவில்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் 26ம் திகதிக்கு முன்னர் இருந்த முறையே சரியானது என சபாநாயகர் அறிவித்ததையடுத்து, ஜனாதிபதி சந்திப்பொன்றுக்காக ஏற்பாடு செய்திருந்த போதும் முப்படை தளபதிகள் சார்பாக 3 பிரதிநிதிகளை நேற்றைய தினம் சந்திப்புக்காக அனுப்பியுள்ளனர்.
நாட்டின் அரசியலமைப்பை ஏற்கும் தளபதிகள் சட்டத்துக்கே மதிப்பளிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக