வியாழன், 1 நவம்பர், 2018

புதுகோட்டையில் காதலியை நண்பர்களோடு சேர்ந்து பாலியல் கொலை

கஸ்தூரி
ராஜ்குமார்
திருமணம் செய்துகொள்வதாக
ஆசைவார்த்தைக்கூறி(#நாடகக்காதல்) காதலனே காதலியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடூராமாக கொலை செய்த சம்பவம். புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கைச் சேர்ந்த கஸ்தூரியும்(முத்தரையர் சமூகம்) ராஜ்குமார் (கள்ளர் சமூகம்) இருவரும் காதலித்து வந்ததாக செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29.10.2018 அன்று கஸ்தூரி ஆலங்குடி வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறி மணல்மேல்குடி என்ற ஊரில் தங்கவைத்து
கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தாக்கி கொலை செய்து கைகால்களை கயிற்றால் கட்டியும் மூட்டை கட்டியும் மல்லிப்பட்டினம் குட்டையில் வீசியுள்ளான்...! குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்.
தீக்கதிர் :  காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு சாவில் மர்மம் இருப்பதால் உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே பரபரப்பு
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.படுகொலை செய்யப்பட்ட கஸ்தூரி
புதுக்கோட்டை, அக். 31- அக். 28 ஆம் தேதி அன்று காணாமல் போன இளம்பெண் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் ஆற்றில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அக். 28 ஆம் தேதி முதல் கஸ்தூரியைக் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அப்பெண்ணை தேடி வந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் ஆற்றில் சடலமாக இளம்பெண் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் கஸ்தூரியினுடையதுதான் எனவும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி உறவினர்கள் கீரமங்களம், பனங்குளம், கொத்தமங்கலம், ஆவனம் கைகாட்டி, மரமடக்கி உள்ளிட்ட பலவேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்நிலையில், ஆலங்குடியில் டாட்டா ஏசி வாகனம் ஓட்டும் நாகராஜூக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை நாகராஜ் மூலம் கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதர் சங்கம் கண்டனம்
இச்சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் பி.சுசீலா ஆகியோர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் காலை வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து வீடு திரும்பும் வரை பல்வேறு பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறை மிகுந்த மெத்தனம் காட்டி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகாருக்குக் கூட முறையான நடவடிக்கை எடுப்பதில்லை.இதன் உச்சகட்ட வெளிப்பாடுதான் கஸ்தூரியின் கொடூரக் கொலைச் சம்பவம். கஸ்தூரின் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக