திங்கள், 19 நவம்பர், 2018

முதல் தீட்டு என வீட்டிற்கு வெளியே குடிசையில் தங்கிய சிறுமி மரம் விழுந்து உயிரழப்பு

Sumathi Padmanaban :  ஏழாம் வகுப்பு மாணவி வயதிற்கு வந்து விட்டாள் முதல்
தீட்டு தனி குடிசை போட்டு தோட்டத்தில் தனியாக இருக்க வைத்திருக்கிறார்கள் . முழு இரவும் புயல் காற்றின் சத்தம் அதைத்தொடர்ந்து மரங்கள் விழும் சத்தம். அவளது குடிசை மீது மரம் விழுந்து அந்த உயிரை பறித்திருக்கிறது. குழந்தையை இரவு நேரத்தில் தனித்து இருக்க வைத்து இருக்கிறார்கள் . அவள் எப்படி பயந்து அலறி இருப்பாள் என மனம் பதறுகிறது. இந்த காலத்திலும் முதல் தீட்டு என்று கடைபிடிக்கும் நம்பிக்கைகள் காட்டுமிராண்டித்தனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக