வியாழன், 22 நவம்பர், 2018

5 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு

5 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்புதினத்தந்தி :தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க்ப்பட்டுள்ளது. சென்னை,< தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


திருவாரூரில் பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.

மழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுசேரியிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இன்றைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக