சனி, 10 நவம்பர், 2018

41 % தமிழகக் கடற்கரையைக் காணோம்! கடற்கரை அரிப்பு ...

41 % தமிழகக் கடற்கரையைக் காணோம்! மின்னம்பலம்:  கடல் அரிமானத்தினால் தமிழகத்தின் 41 விழுக்காடு கடற்கரை அரிக்கப்பட்டு விட்டதாக தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (நவ-10) கடற்கரை ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரம்,புதுச்சேரிக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையம் ஆகிய பாதிக்கப்பட்ட இடங்களில் கடற்கரையின் அரிமானத்தை மேலும் தடுக்க தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
துறைமுகங்கள், ஆறுகளில் அணைகள் கட்டப்படுவதால் அங்குள்ள மண் ஓட்டமானது தடைபடுகிறது. அதனால் கடற்கரைக்கு மண் வரவிடாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கடல் இருக்கின்ற கடற்கரையை அரித்து சென்று விடுகிறது.இ
துதான் கடல் அரிமானத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது
991.47 கி்.மீ தொலைவு உள்ள தமிழக கடற்கரையில் ஏறத்தாழ 407.05 கி.மீ பகுதி கடற்கரையில் அரிமானம் ஏற்பட்டுள்ளது.23 விழுக்காடு கடற்கரையில்தான் மணல் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எம்வி.ராம மூர்த்தி பத்திரிகையாளர்களிடம் பேசியபோது புதுச்சேரி அருகிலும் கடலுார் பெரிய குப்பத்திலும் அரிமானத்தினால் பாதிக்கப்பட்ட கடற்கரையை சீர்செய்யும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக