வியாழன், 29 நவம்பர், 2018

கலைஞர் கட்டிய 36 அணைகள் .. கொள் அளவு விபரம்,, பட்டியல்!

17041701tamil.splco.me : திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அளித்த சமீபத்திய
பேட்டி ஒன்றில் எம்ஜியார் ஜெயலலிதா அதிமுக ஆட்சி எந்த அணையும் கட்டப்படவில்லை என்றும் எம்ஜியார் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மூன்று அணைகள் கூட  திமுக காலத்திலே திறக்கப்பட்டதாகவும் கூறி இருந்தார். .
இதை அடுத்து, தமிழ்நாட்டில் அதிக அணைகளை கட்டியது யார் என்கிற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வலை பதிவு ஆதரவாளர்கள் திராவிட காலத்தில் அணைகள் கட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வலை பதிவர்கள் அருள் பிரகாசம் , பிரகாஷ் , பாபு ஆகியோர், திமுக ஆட்சியிலேயே அதிக அணைகள் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  அதன் தொகுப்பு கீழே….
*பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால் இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்த இடங்களில் தான் அரசர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் காமராஜர் அணைகளை ஏற்கனவே கட்டினார்கள்.

பிறகு வந்த கலைஞர் தனது ஆட்சி காலத்தில் தேவையும், இருந்த இட வசதிக்கும் தகுந்த மாதிரி அணைகளை கட்டினார். அதன்படி திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இவைகள் :
மணிமுக்தாநதி = 20.62 மில்லியன் கன மீட்டர்
சின்னார் = 13 மில்லியன் கன மீட்டர்
ராஜதோப்புக்கிணர் = 00.58 மில்லியன் கன மீட்டர்
மோர்தானா = 07.40 மில்லியன் கன மீட்டர்

செண்பகத்தோப்பு = 08.13 மில்லியன் கன மீட்டர்
வரட்டார் = 03.12 மில்லியன் கன மீட்டர்
ஆண்டியப்பனூர்ஓடை = 03.18 மில்லியன் கன மீட்டர்
மஞ்சளார் 13.48 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 1 16.99 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 2 11.13 = மில்லியன் கன மீட்டர்
கட்னா 09.97 = மில்லியன் கன மீட்டர்
ராமாநதி 04.30 = மில்லியன் கன மீட்டர்
பிளவுக்கல் பெரியார் = 05.44 மில்லியன் கன மீட்டர்
பிளவுக்கல் கோயிலார் = 03.77 மில்லியன் கன மீட்டர்
கருப்பாநதி = 05.24 மில்லியன் கன மீட்டர்
அணைக்குட்டம் =06.66 மில்லியன் கன மீட்டர்
நம்பியாறு = 02.33 மில்லியன் கன மீட்டர்
பொய்கையாறு = 02.97 மில்லியன் கன மீட்டர்
பரப்பலார் = 05.60 மில்லியன் கன மீட்டர்
பெரும்பள்ளம் = 03.28 மில்லியன் கன மீட்டர்
குதிரையாறு = 07.16 மில்லியன் கன மீட்டர்
நொய்யல் ஆத்துபாலம் = 06.46 மில்லியன் கன மீட்டர்
நிரார் மேல் அணை = 01.10 மில்லியன் கன மீட்டர்
பெருவரிப்பள்ளம் = 11.02 மில்லியன் கன மீட்டர்
சோலையார் =152.50 மில்லியன் கன மீட்டர்
நங்கஞ்சியார் =07.20 மில்லியன் கன மீட்டர்
நல்லத்தங்காள் ஓடை = 06.32 மில்லியன் கன மீட்டர்
பொன்னனியாறு = 03.40 மில்லியன் கன மீட்டர்
உப்பார் (ஈரோடு) =14.92 மில்லியன் கன மீட்டர்
ஒரே அணியில் இருந்தாலும் வளர்ச்சி சம்பந்தமாக இரு கட்சிகள் உணர்வாளர்கள் மோதி கொள்வதை வரவேற்கப்பட வேண்டிய விவாதம் என்றும் இப்படிபட்ட சாதனைகளை சொல்லி இரு பிரிவினரும் விவாதம் செய்வது சிறப்பு என்றும் நடு நிலையாளர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்தை தெரிவித்துள்ளனர்.
Sources: http://tamil.splco.me/karuthukal/karuthu.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக