வியாழன், 8 நவம்பர், 2018

30 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது .

மின்னம்பலம்: 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர்
இதுவரை 30 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு மட்டும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்ற 9 தொகுதிகளை பறிகொடுத்திருக்கிறது பாஜக.
மக்களவை இடைத்தேர்தல்கள்: 6இல் மட்டும் வென்ற பாஜக!
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 282 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையில் வெறும் 44 இடங்களில்தான் வென்றிருந்தது.லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் குஜராத்தின் வதோரா, மகாராஷ்டிராவின் பீட் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக 70% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இதன்பிறகு பாஜகவின் வாக்கு வங்கியில் ஆட்டம் ஏற்பட்டுவிட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் பாஜகவுக்கு கடும் பின்னடைவையே தந்திருக்கிறது. இதனால் மக்களவையில் பாஜகவின் பலம் 272 ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் காங்கிரஸின் பலம் 50 ஆக அதிகரித்திருக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸுக்கு இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை.

நடப்பு ஆண்டில் மட்டும் பாஜக தமது கோட்டைகள் பலவற்றையும் பறி கொடுத்திருக்கிறது. தாம் வென்றிருந்த 9 தொகுதிகளில் படுதோல்வியை பாஜக பெற்றிருக்கிறது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டை எனப்படும் கோரக்பூரும் ஒன்று.
2014ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற லோக்சபா இடைத்தேர்தல்களும் வென்ற கட்சிகளும்:
2014ஆம் ஆண்டு
1. வதோதரா- பாஜக
2. பீட்- பாஜக
3. மெயின்புரி- சமாஜ்வாதி
4. மேடக்- தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
5. கந்தமால்- பிஜூ ஜனதா தளம்.
2015
1. ரட்லம்- காங்கிரஸ்
2. போங்கோன் - திரிணாமுல் காங்கிரஸ்
3. வாரங்கல்- தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
2016
1. துரா- என்.பி.பி
2. சந்தோல்- பாஜக
3. தமலுக்- திரிணாமுல்
4, கூச்பிகார்- திரிணாமுல்
5. லக்மிபூர்- பாஜக
2017
1. குருதாஸ்பூர்- காங்கிரஸ்
2. அமிர்தசரஸ்- காங்கிரஸ்
3. ஸ்ரீநகர்- தேசிய மாநாட்டு கட்சி
4. மலப்புரம்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2018
1. பெல்லாரி- காங்கிரஸ்
2. சிமோகா- பாஜக
3. மாண்டியா- மதச்சார்பற்ற ஜனதா தளம்
4 கைரானா- ராஷ்டிரிய லோக் தளம்
5. பால்கர்- பாஜக
6. பாந்த்ரா-கோண்டியா- தேசிய மாநாட்டு கட்சி
7. நாகாலாந்து- என்டிபிபி
8. அராரியா- ராஷ்டிரிய ஜனதா தளம்
9. புல்புர்- சமாஜ்வாதி
10,. கோரக்பூர்- சமாஜ்வாதி
11. ஆல்வார்- காங்கிரஸ்
12. ஆஜ்மீர்- காங்கிரஸ்
13. உலுபேரியா- திரிணாமுல் காங்கிரஸ்
மதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக