தினத்தந்தி : வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் வெளியில் சென்ற போது 2
வாலிபர்களிடம் சிக்கிய மாணவி அது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி:
மாணவி சவுமியா பாலியல் வன்புணர்வு செய்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்
நிலையில், புகாருக்குள்ளான 2 வாலிபர்களும் அவரை கடுமையாக ‘செக்ஸ்’ சித்ரவதை
செய்துள்ளனர்.
மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை.
இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் நைசாக பின் தொடர்ந்து சென்றனர். சவுமியா இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்த போது சதீஷ் பின்னால் சென்று கை குட்டையால் வாயை பொத்தி கீழே தள்ளிவிட்டார். பின்னர் சவுமியாவிடம் தவறாக நடந்துள்ளார்.
மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை.
இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் நைசாக பின் தொடர்ந்து சென்றனர். சவுமியா இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்த போது சதீஷ் பின்னால் சென்று கை குட்டையால் வாயை பொத்தி கீழே தள்ளிவிட்டார். பின்னர் சவுமியாவிடம் தவறாக நடந்துள்ளார்.
இந்த
நேரத்தில் ரமேஷ், சவுமியாவை திமீறி எழ முடியாத அளவுக்கு கெட்டியாக
பிடித்துக் கொண்டார். 2 பேரும் சேர்ந்து மாணவியை செக்ஸ் சித்ரவதை
செய்துள்ளனர். 2 பேரின் பிடியில் இருந்தும் சவுமியாவால் உடனடியாக மீண்டு
வரமுடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகே, அவர்களின் கோர செக்ஸ்
பிடியில் இருந்து அவரால் மீள முடிந்தது.
பின்னர்
உயிரை கையில் பிடித்தபடி அங்கிருந்து சவுமியா வீட்டுக்கு ஓடி வந்தார். இந்த
நேரத்தில் அவரது தாய் - தந்தை இருவருமே வீட்டில் இல்லை. மாலையில் அவர்கள்
வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சவுமியா கதறி அழுதபடியே
கூறியுள்ளார்.
கடந்த 5-ந்தேதி அன்று கற்பழிப்பு
சம்பவம் நடந்துள்ளது. சவுமியாவின் வீட்டில் வாகன வசதி எதுவும் இல்லாததாலும்
இரவு 7 மணி அளவிலேயே தாய்-தந்தை வந்ததாலும் உடனடியாக அவர்களால் புகார்
அளிக்க முடியவில்லை. இதனால் மறுநாள் காலையில் சென்றே புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி சவுமியா அளித்துள்ள புகாரில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மாணவி அளித்த புகார் விவரம் வருமாறு:-
நான்
10-ம் வகுப்பு வரை சிட்லிங் கிராமத்தில் படித்து விட்டு
பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் படித்தேன்.
இந்தாண்டு அதே பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் அங்குள்ள விடுதியில்
தங்கி படித்து வந்தேன். 3-ந் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்தேன்.
5-ந்தேதி
பகல் 2 மணியளவில் என் தாய், தந்தையர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் நான்
மட்டும் அங்குள்ள காட்டுக்கு மலம் கழிக்க சென்றேன்.
அப்போது
எங்கள் ஊரை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் சதீஷ், மற்றும் அவருடைய நண்பர்
பெருமாள் மகன் ரமேஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். நான் காட்டுப்பகுதியில்
செடி மறைவில் மலம் கழிக்க முற்பட்ட போது சதீஷ் என் பின்னால் வந்து அவன்
கையை வைத்து என் வாயை பொத்தி அவன் ஆடையை அவிழ்த்து என்னை தள்ளி கெடுக்க
முயன்றான்.
அப்போது ரமேஷ் என்னை பிடித்துக்
கொண்டு நான் திமிராத படி சதீசுக்கு உதவி செய்தான். நான் சுதாரித்துக்
கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். விடுடா, விடுடா என சொல்லி அவனிடமிருந்து
திமிறி வீட்டு பக்கம் ஓடி வந்து விட்டேன். வந்த களைப்பால் படுத்து மயங்கி
விட்டேன்.
2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை அண்ணாமலை போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
ஆளில்லாத நேரத்தில் என் மகள் கழிவறை சென்ற போது என் மகளை வழி மறித்து வாயில் துணியை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.
இந்த
வேலை செய்தவர்கள் சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிகண்ணுவின் மகன்
சதீஷ், பெருமாளின் மகன் ரமேஷ் என்பவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள்
மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக