புதன், 21 நவம்பர், 2018

ஜெயம் ரவியின் அடங்க மறு .. துரத்திக்கொண்டு வரும் ரஜினியின் 2.0 ....

வெப்துனியா: தமிழ் திரைப்படங்கள் பொதுவாக ஒவ்வொரு வெள்ளியன்று மட்டுமே வெளியாகி வருகிறது. ஒரு சில பெரிய ஸ்டார்கள் படங்கள் மட்டும் வியாழன் அன்று வெளியாகும். .
இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’ திரைப்படம் நாளை புதன்கிழமை வெளியாகவுள்ளது.  வரும் 29ஆம் தேதி வியாழன் அன்று ரஜினியின் '2.0' திரைப்படம் வெளியாகவுள்ளதால் அன்றைய தினம் தற்போது திரையரங்குகளில் ஓடிவரும் அனைத்து படங்களும் தூக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே 8 நாட்களை மட்டுமே கணக்கில் கொண்டு 'அடங்கமறு' நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி, ராஷிகண்ணா, பொன்வண்ணன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக