மாலைமலர் :சென்னை:
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது.
இதற்கு ‘கஜா’ (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும். இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது.
வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்றார். #GajaStorm #ChennaiRain

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக