திங்கள், 29 அக்டோபர், 2018

ஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் Neet பாண்டியராஜன்

பாலியல் குற்றச்சாட்டு மூத்த தலைவர்கள் tamil.oneindia.com-hemavandhana: திருவள்ளூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லும் காலம் போலும்! மீ டூ விவகாரம் கடந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக போய்க் கொண்டிருகிறது. தமிழகத்தில் சின்மயி வைரமுத்து மேல் பாலியல் குற்றச்சாட்டை சொல்லி இதனை ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராக களம் இறங்கி புகார்களை பதிய ஆரம்பித்து விட்டார்கள்.
3 அமைச்சர்கள் மீடூதான் இப்படி காலில் சக்கரம் கட்டி சுழன்று வருகிறது என்றால் அதிமுக அமைச்சரின் பாலியல் சம்பந்தமான புகாரை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கொளுத்தி போட அது மேலும் கொளுந்துவிட்டு எரிந்தது.
தற்போது மேலும் 3 அமைச்சர்கள் இப்படிப்பட்ட பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர், தேவைப்படும்போது ஆதாரங்களை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார் வெற்றிவேல்.


 இந்நிலையில் ரூட் மாறி பாலியல் குற்றச்சாட்டு திமுக பக்கம் வந்திருக்கிறது. இதை சொல்லியிருப்பவர் தமிழக அமைச்சர் பாண்டியராஜன்தான். குற்றச்சாட்டப்பட்டிருப்பவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட பலர் என்பதுதான் ஷாக்கான விஷயம். இதை தொடர்ந்து, முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டிருப்பது, மக்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம் அருகே பாடியநல்லுரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்" உள்ளன என்றார்.

கூடியிருந்த மக்கள் முன்னிலையிலேயே இந்த குற்றச்சாட்டை பாண்டியராஜன் சுமத்தியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர்கள்
மேலும் "பெண்கள் துணிச்சலாக அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பான கட்சி அதிமுக மட்டும்தான்" என்று கடைசியாக சொல்லி முடித்தார். திமுக தலைவர் ஸ்டாலின், மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் உள்ளிட்டவர்கள் மீது அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு கூறிய விவகாரம் தற்போது சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக