செவ்வாய், 23 அக்டோபர், 2018

தோழர் பாப்பம்மாள் .. உண்மையான metoo போராளி .. சொல்லப்படாத மீ டூ க்கள்

சாதி வெறி எதிர்த்து போராடி வரும் தோழர் பாப்பமாள் திமுக தலைவர்
சிதம்பரம்  பத்மினிக்கு நேர்ந்த கொடுமை
சந்தித்து சத்துணவு துறையில் பட்டியல் இன மக்களுக்கு நடந்து வரும் சாதி கொடுமைகள் பற்றி விவரித்தார் திமுக தலைவர் தோழர் பாப்பமாள் நடத்தி வரும் மனித உரிமை போராட்டங்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும் என்று உறுதி அளித்தார்
Meeran Mohamed : சொல்லப்படாத மீ டூக்கள் 6 வருடங்களுக்கு முன்பு நடந்தது இது...
நாங்கள் 4 பேர் எங்களுக்கு அப்போது 20 முதல் 30 வயது இருக்கும். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் குடிசை போட்டு தங்கியிருந்ேதாம். வயிற்று பசி போக்க வயல் எலிகளை பிடித்து சமைத்து உண்போம். ஆண்கள் செங்கல் சூளைக்கு கூலி வேலைக்கு செல்வார்கள். ஒரு திருட்டு வழக்கில் எங்களை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார்கள். இரவு முழுவதும் அடைத்து வைத்து எங்களில் ஒருத்திக்கு மாதவிலக்கு என்பதையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய, கதற கதற கற்பழித்தார்கள். காக்கி நாய்கள்.

-இருளர் இன பெண்கள்
26 வருடங்களுக்கு முன்பு...
நாங்கள் 18 பேர். எங்களுக்கு 18 வயது முதல் 40 வயது வரை இருக்கும். நாங்கள் அடுப்பெறிக்க வைத்திருந்த விறகை சந்தனக்கட்டை என்று கூறிக்கொண்டு ஒரு நாள் எங்கள் ஊருக்குள் 108 போலீசார், 155 வனத்துறையினர், 6 வருவாய் துறையினர் புகுந்தார்கள். ஊரில் நடுவில் எல்லோரையும் உட்கார வைத்து விட்டு, பார்க்க லட்சணமாக இருந்த எங்கள் 18 பேரை தூக்கிக் கொண்டு காட்டுக்குள் ஓடினார்கள். எங்களில் 3 பேர் நான்கு மாதம், 5 மாத கர்ப்பினிகள் அதைபற்றியெல்லாம் கவலைப் படாமல் வெறிநாய்களை போல எங்கள் கற்பை வேட்டையாடினார்கள். வன்புணர்வு கொள்ள முடியாத 28 சிறார்களை அதைத் தவிர அனைத்தையும் செய்தார்கள்.
-வாச்சாத்தி பெண்கள்.
22 வருடங்களுக்கு முன்பு.
அப்போது எனக்கு சுமார் 30 வயது இருக்கும். என் கணவரை திருட்டு வழக்கு ஒன்றில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் அழைத்துச் சென்றார்கள். மறுநாள் நான் அவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றேன். அப்போது என் சேலையை உருவி அவமானப்படுத்தினார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு என்னையும் அழைத்துச் சென்றார்கள். இரவில் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்தார்கள். அந்த அறையின் இன்னொரு மூலையில் என் கணவரை கட்டி வைத்திருந்தார்கள். போலீசார் அவர்களுக்குள் ஒரு விளையாட்டு விளையாண்டு அதில் ெஜயிப்பவர்கள் அதற்கு பரிசாக என்னை பலாத்காரம் செய்து விட்டுப்போனார்கள். அதில் ஒருவர் என் பெண்குறி எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்று பார்ப்பதற்காக லத்தியை சொருகினார். அப்போதே நான் நரகத்ைத பார்த்தேன். ஒருவர் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத வகையில் இயற்கைக்கு மாறாக என்னை கதற கதற கற்பழித்தார். ஏன் ஒரு பிறப்புறுப்பை வைத்தாய் இறைவா நான்கைந்து வைத்திருந்தால் வலியில் இருந்து தப்பித்திருப்பேனே என்று கதறி அழுதேன்... 11 பேர், ஒரே இரவு...கணவன் கண்முன். எல்லாம் இழந்து நாய் தின்று போட்ட கறித் துண்டாய் நான் கிடந்தேன். என் கணவன் உயிரற்று கிடந்தார்.
-சிதம்பரம் பத்மினி
இது மீ டூவில் வருமா சகோதரிகளே...
உங்களோடு சேர்த்து இவர்களின் வலியையும் பேசுங்களேன்.
நன்றி திரு.;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக