திங்கள், 22 அக்டோபர், 2018

ஏ.ஆர். ரிஹானா : அது ஏன் வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்ய வேண்டும்.

 tamiloneindia :சென்னை: வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும்
தெரியும் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரிஹானா தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அவர் சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கழித்து அது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
 இந்நிலையில் இது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரிஹானா நியூஸ் 7 செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் சின்மயி சொல்வதை நம்புகிறேன்.
ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது தான் பிரச்சனையே. 15 ஆண்டுகள் கழித்து பேசுகிறாரே சைக்கோவாக இருப்பார் போல.
கோபம் என்றால் அன்றைக்கே வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாகவா அமைதியாக இருப்பது. தெரியும் தெரியும் வைரமுத்துவின் பெயரை கெடுக்க சின்மயி இப்படி செய்யவில்லை. எதற்காக 15 ஆண்டுகள் சும்மா இருந்தீர்கள் என்பதே என் கேள்வி?.
எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் வைரமுத்து பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கம் தெரியும்.
இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.

வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருந்திருக்க வேண்டும். அவரை இந்த அளவுக்கு வளர விட்டிருக்கக் கூடாது.
அவரை சின்மயி தன் திருமணத்திற்கு அழைத்து ஆசிர்வாதம் வாங்கியது எல்லாம் தேவையில்லாதது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அது ஏன் வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்ய வேண்டும். பல பாடகர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது. அவற்றையும் பெரிய அளவில் கவனிக்க வேண்டும். வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது. ஏனென்றால் அவர் கிசுகிசுக்களில் இருந்து தள்ளியே இருப்பவர். பல பெண்கள் என்னிடம் வைரமுத்து பற்றி தெரிவித்துள்ளனர் என்கிறார் ரிஹானா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக