சனி, 20 அக்டோபர், 2018

கேரளா பினராயி விஜயன் அரசை கலைக்கவேண்டும் ... அர்ஜுன் சம்பத்

வெப்துனியா :சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அங்கு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பின்வருமாறு பேசினார். கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. ஆனால், சபரிமலை விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளது.
நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்வர்  பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.மேலும், சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக