ஞாயிறு, 28 அக்டோபர், 2018

இம்ரான் சகோதரி பினாமி பெயரில் சொத்து வெளிநாடுகளில் குவிப்பு

 இம்ரான் சகோதரி, பினாமி, பெயரில் ,சொத்து ,குவிப்பு தினமலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் சகோதரி வெளிநாடுகளில் பினாமி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வெளி நாட்டிற்கு சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்தவருவது குறித்து அந்நாட்டின் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது.தொடர்ந்து பட்டியல் ஒன்றையும் தயாரித்தது. இந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி முன் சமர்ப்பித்தது.
பட்டியலில் ஐக்கிய அரபு நாடுகளில் பினாமி பெயர்களில சொத்துவாங்கி குவித்துள்ள அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பட்டியலில் 40க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் பாக்., பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டு முகவரி மற்றும் இமெயிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக