வியாழன், 18 அக்டோபர், 2018

பெண் நிருபரின் காரை அடித்து நொறுக்கி விரட்டிய சபரிமலை பக்தர்கள் என்கின்ற குண்டர்கள்


tamil.oneindia.com - veerakumaran.: போராட்டக்காரர்கள் பெண் நிருபரின் காரை அடித்து உடைக்கும் திக் திக் கட்சி- வீடியோ பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரிப்போர்ட்டிங் செய்ய சென்ற பிரபல ஆங்கில செய்தி சேனலின் பெண் நிருபர், திரளான பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி தாக்குதலுக்கு உள்ளான திக் திக் காட்சிகள் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் முதல் முறையாக நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் சிலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.
இவர்களை நிலக்கல் பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பெண் பத்திரிகையாளர்கள் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. பல ஆங்கில டிவி சேனல்களும் பெண் நிருபர்களை கள நிலவரத்தை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது.
அப்படி ஒரு ஆங்கில செய்தி, சேனலின் நிருபரான ராதிகா ராமசாமி, நேற்று நிலக்கல் பகுதியில் காரில் சென்றார். அவர் மேற்கொண்டு சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தடுத்தனர்.

 போதிய போலீஸ் இல்லை .. அந்த இடத்தில் போலீசார் சிறு அளவிலேயே இருந்தனர். அவர்கள் பெண் பத்திரிகையாளரை திரும்பி போக கூறினர். அதற்குள்ளாக மேலும் பல போராட்டக்காரர்கள் அங்கு சூழ்ந்தனர்.
அவர்கள் காரை அடிக்க ஆரம்பித்தனர். சிலர் கார் கண்ணாடியை உடைத்தனர். போய்விடுகிறேன்.. இதையடுத்து அந்த பெண் அச்சமுற்றார். நான் போகிறேன், நான் போகிறேன் என்று மலையாளத்தில் கூறினார்.
ஆனால் இதை போராட்டக்காரர்கள் காதில் கேட்க தயாராக இல்லை. அவர்கள் காரை அடிக்கும் சத்தம், வீடியோவில் கேட்பவர்களையே திகில் கொள்ளச் செய்யும்.
கார் சீட் பெல்டை கழற்றிவிட்டு, அந்த பத்திரிகையாளர் தங்களை தாக்க வேண்டாம் என்று கெஞ்சுவதை போல இந்த வீடியோ உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக