மாலைமலர் :
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள்
போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என
வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் பல
ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை துரிதம் காட்டாத
அரசு, மிகப்பெரிய மக்கள் போராட்டத்துக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றியது.
ஆனால், அதற்காக 13 பேர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது.
இந்த விவகாரம் பூதாகரமாகி வெடித்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலை
இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம்
நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் ஒன்றான ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசிய
அதன் தலைவர் அணில் அகர்வால், மிக விரைவில் ஆலை திறக்கப்படும் என்ற
நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இன்று தான் தமிழகத்தில் 3 இடங்களில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது
அதேசமயம், இன்று தான் தமிழகத்தில் 3 இடங்களில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக