வெள்ளி, 5 அக்டோபர், 2018

இளையராஜா நாட்டு புற கலைஞர்களை ஏன் புறக்கணிக்கிறார்?

Adv Manoj Liyonzon : எங்கும் புகழ் துவங்க…….
தமிழ் சினிமாவில் ஒருசில இசையமைப்பாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள், காரணம் சினிமா இசையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தபடியால்
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், அவர்கள் நாட்டுப்புற பாடகர் டிகேஎஸ் நடராஜன் அவர்களுக்கு வாய்ப்பளித்தார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அவர்கள் தேனி குஞ்சரம்மாள் அவர்களுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் சின்னப்பொண்ணு, பறவை முனியம்மா ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் வேல்முருகன், தஞ்சை செல்வி, ராஜா மற்றும் தாக்ஷாயனி ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் இமான் அவர்கள் மகிழினி மணிமாறனுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா அவர்கள் கானா பாலா அவர்களுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் ஹேரிஸ் ஜெயராஜ் மரண கானா விஜி அவர்களுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் தீனா அவர்கள் அந்தோனி தாசன் அவர்களுக்கு வாய்ப்பளித்தார்

இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு அவர்கள் கானா உலகநாதனுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர்கள் மதுரை சரோஜா, பாண்டி, ராஜா, மதிச்சியம் பாலா ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் சான் ரோல்டண் அவர்கள் அறந்தை பவா, கே பெருமாள் ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்
சமீபத்தில் இசையமைப்பாளராக பரிணமித்த சந்தோஷ் தயாநிதி அவர்கள் கூட ஜெயமூர்த்தி மற்றும் கோட்டைச்சாமி அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் அயிஞ்சிவாக்கம் முத்து, காகா பாலா, மற்றும் சமீபத்தில் வந்த பரியேறும் பெருமாள் படத்தில் வரும் எங்கும் புகழ் துவங்க பாடல் மூலம் கல்லூர் மாரியப்பன் ஆகியோருக்கு வாய்ப்பளித்து வருகிறார்
ஆனால்
நாட்டுப்புறத்திலிருந்து வந்து, 1000 திரைப்படங்கள்,7000 பாடல்கள் என்று இசையில் உச்சம் தொட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இளையராஜா, ஏனோ நாட்டுப்புற கலைஞர்களுக்கு 1% அளவு கூட வாய்ப்பு தரவில்லை.
உண்ட சோறு செரிமானம் ஆகாம தாளமும் தெரியாம ஜதியும் தெரியாம பத்து பெரிய மனுசங்க ஒன்னா உக்காந்து கை தட்டி ரசிக்கப்படுகிறவர்கள் இல்லை நாட்டுப்புற கலைஞர்கள்
பசியோட, பசிய மறக்குறத்துக்காக பட்டினியோட வந்து உக்காந்துட்டு ரசிக்கிற ஏழை உழைக்கும் பாட்டாளி மக்கள சந்தோசப்படுத்துறவங்க தான் நாட்டுப்புற கலைஞர்கள். இந்த மண்ணின் கலைஞர்கள்.
இந்த மண்ணுல நாளெல்லாம் கஷ்டப்பட்டு இந்த ஊருக்கெல்லாம் சோறு போடுறானே, அவனுக்கு சந்தோசத்த கொடுக்குற கலைஞர்கள் தான் இந்த நாட்டுப்புற கலைஞர்கள்.
இந்த நாட்டுப்புற கலைஞர்களும் பட்டினியோடு திரியும் ஏழைகள் தான்.
சினிமா வாய்ப்பு தான் உட்சபட்ச வாய்ப்பு என்று சொல்ல வரவில்லை. சினிமா வாய்ப்பு இந்த ஏழை எளிய நாட்டுப்புற கலைஞனின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் வல்லமை உடையது. நாட்டுப்புற கலைஞர்கள் அழியாமல் இருக்க உதவிடும்!
அதனால்தான் இளையராஜாவின் இசையை ரசித்த அளவிற்கு, அவரை நான் கொண்டாடுவதுமில்லை, ரசிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை.
எங்கும் புகழ் துவங்க, வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கு
எங்கும் புகழ் துவங்க, நாட்டுப்புற கலைஞர்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக