செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஸ்ரீமதி தற்கொலையில் மர்மம்..!?* *நாற்காலியில் அமர்ந்தபடி தூக்கா.?.

Kanimozhi MV : இதுவரை கிடைத்த தகவல்கள்:
1. டெல்லியில் உள்ள ஒரு தனியார் அய்.ஏ.எஸ் பயிற்சி வகுப்பில் கடந்த *6 மாதமாக* தங்கி படித்து வந்திரிக்கிறார்.

2. அவர் தங்கியிருந்த அறையில் உடன் *ஒரு மாணவியும்* இருந்திருக்கிறார்.
3. கடந்த 1 மாதம் முன்பே உடன் இருந்த மாணவி *விடுதியை காலி செய்துவிட்டு* சொந்த ஊருக்கு கிளம்பிவிட்டார்.
4. அந்த மாணவி வெளியேறிய சிலநாட்களில், வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து, *தான் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.* பெற்றோரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை கொடுத்துள்ளனர்.
5. கடந்த 15 நாட்களாக ஸ்ரீமதி *வகுப்பிற்கு செல்லவும் இல்லை, அவர் அறைக்கு வரும் எந்த நாளிதழும் படிக்காமல், அப்படியே கசங்காமல்* இருந்துள்ளன..

6. தற்கொலை செய்வதற்கு முன், *கடிதமும்* எழுதியுள்ளார். அதில், பெற்றோரிடம் மன்னிப்பையும், தனது சகோதரனை நன்றாக படிக்க வைக்கும் படியும் கூறியிருக்கிறார். *தான் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்கிறேன்* என்று அந்த கடிதத்தில் பதிவு செய்திருக்கிறார்.
7. அவர் படித்த பண்ணாரியம்மன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உடன் படித்த *ஆசிரியர் மற்றும் அவரது தோழிகளிடம் பேசியதில், "அவ ரொம்ப போல்டான (Bold) பொண்ணு, எந்த சவாலையும் எதிர்க்கிற தைரியம் உடையவள். ஏன் இப்படி பண்ணுனாள்னு தெரில"* என்று வருந்தினர்.
8. தற்கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஸ்ரீமதி, *நாற்காலியில் அமர்ந்தபடி கயிற்றில் தொங்கி இருக்கிறார்.*
நமக்கு எழும் சந்தேகங்கள்..
*1. நாற்காலியில் அமர்ந்தபடி எப்படி தூக்குமாட்டிக் கொள்ள முடியும்..?*
*2. தைரியமான பெண் என்று பள்ளி தோழிகள் கூறியதற்கு மாறாக ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும்..?*
*3. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஸ்ரீமதி-க்கு என்ன விதமான மன உளைச்சல் ஏற்பட்டது..? யாரால்? எதனால்..? எப்படி..?*
*4. விடுதியில் உடனிருந்த மாணவி ஏன் விடுதியை காலி செய்தது ஏன்..?*
*5. ஸ்ரீமதி தற்கொலையா..? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா..?*
*6. தொடர்ச்சியாக தமிழக மாணவர்கள் மட்டுமே தற்கொலையில் ஈடுபடுவது ஏன்..? எதனால்.? யாரால்..?*
இது போன்ற பல சந்தேகங்களும் மர்மங்களும் ஸ்ரீமதியின் மரணத்தில் இடம் பெற்றுள்ளன.
இதுவரை *தமிழக மாணவர்கள் டெல்லியில் பயின்று இது போன்று மர்மமான முறையில் தற்கொலை செய்து வருவது தொடர் நிகழ்வாக* இருந்து வருகிறது.
இதை தீர விசாரித்து உண்மையை கொண்டு வர வேண்டும் என காவல்துறை மற்றும் நமது மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
*தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் தொடர் இன்னல்களை கண்டித்து மாநில அளவில் மாணவர்கள் இணைந்து போராட்டம் செய்வோம் என்பதையும் தெரிவித்திக் கொள்கிறோம்..!>தமிழ்நாடு_மாணவர்_மன்றம்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக