செவ்வாய், 23 அக்டோபர், 2018

சி பி ஐ அதிகாரிகளிடையே தகராறு ... மூத்த அதிகாரிக்கு எதிராக லஞ்ச வழக்கு

சிபிஐ மூத்த அதிகாரிக்கு எதிராக லஞ்ச வழக்கு: வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீது லஞ்ச புகார் சுமத்தியுள்ளது சிபிஐ அமைப்பு
NDTV.COM : New Delhi: சிபிஐ-யின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அமைப்பு, லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தற்போது பரபரப்பான பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சதிஷ் சனா என்கின்ற தொழிலதிபர், சிபிஐ-க்கு, அஸ்தானா தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. சனா, சிபிஐ பதிவு செய்த ஒரு வழக்கில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என அஸ்தானா, இடைத்தரகர் மனோஜ் பிரசாத் மூலம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் 2 மாதங்களுக்கு முன்னர் சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா, சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மீது ஒரு பரபரப்பு புகாரை, அமைச்சரவை செயலாளரிடம் தெரிவித்தார். வெர்மா, சனாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் எனவும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்தார் அஸ்தானா.

ஆனால் சனா, சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி முன்னர் ஆஜராகி, டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை, அஸ்தானாவுடன் தொடர்பு வைத்திருக்கும் இடைத்தரகரிடம் லஞ்சப் பணம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சனாவின் வாக்குமூலத்தை அடுத்து, இடைத்தரகரான மனோஜ் பிரசாத் கடந்த 16 ஆம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த போது கைது செய்யப்பட்டார்.
அஸ்தானாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்-ல், சனா, அவரை நேரடியாக பார்த்தது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் மனோஜ் பிரசாத் கைதுக்குப் பிறகு, அஸ்தானா போன் அழைப்புகளை சிபிஐ ஆராய்ந்துள்ளதாக கூறுகிறது.
மனோஜின் கைதுக்குப் பிறகு இன்னொரு புலனாய்வு அமைப்பின் அதிகாரியிடம் அஸ்தானா, மனோஜின் கைது குறித்து பேசியுள்ளதாக சிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்துகிறது.

COMMENT
மனோஜின் கைதுக்குப் பிறகான அக்டோபர் 17 ஆம் தேதி, அஸ்தானா மற்றும் இன்னொரு புலனாய்வு அமைப்பின் அதிகாரியும் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக