சனி, 20 அக்டோபர், 2018

சபரிமலையில் காணமல் போன நடிகர்களும் மீ டூக்களும்

indurkcnakkheeran.ஆதனூர் சோழன்:  அடுத்தடுத்து மீடியாக்களில் மூன்று விதமான பேட்டிகளை பார்க்க நேர்ந்தது.
முதல்பேட்டி கமல்ஹாஸனுடையது. அவரிடம் சபரிமலை விவாகரத்தில் அவருடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். உடனே அவர், “இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்பது சரியாக படாது” என்று சொல்லிவிடுகிறார். ஒரு அரசியல் கட்சியின் தலைவராகிவிட்டவர், உச்சநீதிமன்றத் தீர்ப்பை
அமல்படுத்தவிடாமல் காவிப்பண்டாரங்கள் தூண்டுதலில் நடக்கும் வன்முறையையும், பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் அட்டூழியத்தையும் பற்றி கருத்துக்கேட்கிறார்கள். ஆனால், இதுகுறித்து தன்னிடம் கேட்பது சரியாக இருக்காது என்றால், பிறகு எதைப்பற்றித்தான் இவரிடம் கருத்துக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நாட்டில் அப்போது நடக்கும் பரபரப்பான விவாகரங்கள் குறித்துத்தானே ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பார்கள் என்ற குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாதவரா கமல்?
அடுத்து ரஜினி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினி, “காலங்காலமாக கடைப்பிடிக்கும் பழக்கங்களை மாற்றக்கூடாது” என்று கூறியிருக்கிறார். எத்தனை காலமாக பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மைகூட தெரியாமல் தனது இஷ்டத்துக்கு கருத்துத் தெரிவித்திருக்கிறார் ரஜினி.


rahul eshwarஐயப்பன் கோவிலில் 2012 ஆம் ஆண்டு சுனில் சாமி என்ற கொல்லம் தொழிலதிபர் மும்பையைச் சேர்ந்த பல பெண்களுடன் பூஜை நடத்தியிருக்கிறார். அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். 2032 ஆம் ஆண்டு வரைக்கும் உதயாஸ்தமய பூஜைக்கான டிக்கெட்டுகளை மொத்தமாக புக் செய்திருக்கிறாராம் இந்த சுனில் சாமி.
இவருக்கு உதவியவன் ராகுல் ஈஸ்வர் என்ற காவிப்படை உறுப்பினர் என்கிறார்கள். ஐயப்பன் பாதுகாப்பு குழுவில் இவனும் முக்கியமான உறுப்பினர் என்கிறார்கள். இவனுடைய லீலைகளை பார்த்தால் படு கேவலமாக இருக்கிறது.


இந்த விவகாரங்களையெல்லாம் ரஜினி அறிந்திருப்பாரா இல்லையா தெரியவில்லை. இதையெல்லாம் அறிந்திராமல் ரஜினியும் கமலும் என்ன விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என்றே விமர்சகர்கள் வினா எழுப்புகிறார்கள்.


chinmayiமூன்றாவதாக, மீ டூ விவகாரம் தொடர்பாக சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல பெண்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது, சின்மயி மிகவும் பதற்றமாக காணப்பட்டார். வைரமுத்து மீது வழக்குத் தொடருவதற்காக ஆதாரங்களைச் சேகரிப்பதாக அவர் கூறினார். குறிப்பாக, 2004 அல்லது 2005 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து ஈவென்ட்டில் கலந்துகொள்ளச் சென்ற பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
இவர் ஸ்விட்சர்லாந்துக்கு போகவில்லை என்று யார் சொன்னது? நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே நிகழ்ச்சி நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறாரே. பிறகு எதற்காக தேவையில்லாமல் குழப்புகிறார் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? என்று கேட்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக