வியாழன், 25 அக்டோபர், 2018

தலித் சிறுமி கழுத்தை அறுத்து கொலை .. முழு விபரம் .. தினேஷ்குமார் முதலியார் .. சேலம் ..ஆத்தூர்.. தளவாய்பட்டி வருவாய் கிராமம்

Kathiravan Mumbai : "அண்ணா என்ன வெட்டாதே" " நான் ஒரு தப்பும் செய்யலை "
என்று கெஞ்சிய. தலித் சிறுமியை கழுத்தை அறுத்த சாதி வெறியன் தினேஷ்குமார் முதலியார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், தளவாய்பட்டி வருவாய் கிராமம், சுந்தரபுரம் தெற்கு காட்டு கொட்டையில் சுமார் 3.கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டில் தலித் சாமிவேல், சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சர்குருநாதன் என்ற மகனும் அருள்ஜோதி ராஜலெஸ்மி என்ற இரு மகளும் இருந்தனர். அருள்ஜோதிக்கு மட்டும் திருமணம் ஆகி இருந்தது.
சாமிவேலும் மகன் சர்குருநாதனும் டாடா ஏசி வண்டி ஓன்று வைத்து தொழில் செய்து வந்தனர். இரண்டாவது மகள் ராஜலெஸ்மி 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 8வது வகுப்பு படித்து வந்துள்ளாள். இவர்களின் தோட்டம் வீட்டருகில் அதாவது தோட்டக்காட்டில் முதலியார் சாதியை சார்ந்த குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் சாரதா தம்பதிகள் அவனது தம்பி சசி என இரு குடும்பம் மட்டும் வசித்து வந்துள்ளனர். தினேஷ்குமாருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை ஓன்று உள்ளது.

தினேஷ்குமார் அடிக்கடி வெளி ஊருக்கு சென்று கதிர் அறுக்கும் இயந்திரம் வைத்து தொழில் செய்கிறவன், வழக்கம் போல கடந்த ஆயத பூஜை தினத்தன்று 19.10.2018ம் தேதி வீட்டுக்கு வந்து இருக்கிறான். வழக்கம் போல தலித் சிறுமி ராஜலெஸ்மி தினேஷ்குமார் தோட்டத்திற்கு பூ பறிக்க போவது வழக்கமாம், இதனால் சிறுமியிடம் அவளது தனிமையை பயன்படுத்தி சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்து உள்ளான் தினேஷ்குமார். மேற்படி தினேஷ்குமார் தவறான அணுகுமுறையை பேட்ஸை சிறுமி ராஜலெஸ்மி தனது தாய் சின்னபொண்ணுவிடம் சொல்லி இருக்கிறாள். மேற்படி விஷயத்தை வெளியே சொல்லாமல் தனது கணவன் இடமும் சொல்லாமல் சிறுமியிடம் மட்டும் இனிமேல் அங்கு பூ பறிக்க போகாதே என்று சொல்லி வைத்துள்ளார்.
இதனால் 22.10.2018ம் தேதி மாலை 5.00 மணிக்கு தினேஷ்குமார் மனைவி சாரதா சின்னப்பொண்ணு வீட்டுக்கு வந்து வழக்கமாக வந்த பூ பறிப்பீர்களே இன்று ஏன் இருவரும் வரவில்லை என்று கேட்டு உள்ளார். அதனால் மேற்படி தினேஷ்குமாரின் விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைக்கவும், அன்றய தினம் சிறுமி சாரதாவை பார்க்க தினேஷ்குமார் வீட்டுக்கு போக சாராத வீட்டில் இல்லை, அப்போதும் தினேஷ்குமார் சிறுமி ராஜலெஸ்மி இடம் நீ என்னோடு படுத்தாள் பூ கோர்க்க நூல் தருகிறேன் என்று கூறி இருக்கிறான்.
அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த ராஜலெஸ்மி சின்னபொண்ணுவிடம் சொல்லி அழுது இருக்கிறார்கள், மேற்படி சம்பவத்தை தினேஷ்குமார் மனைவி சாரதா தனது புருஷன் பாலியல் விஷயத்தை மோப்பம் பிடித்து சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் கையில் வீட்சு அருவாளுடம் அரைக்கால் டௌசரோடு சின்னப்பொண்ணு வீட்டுக்குள் இரவு 7.30க்கு புகுந்து இருக்கிறான். சின்ன பொண்ணு என்னப்பா இப்படி வார என்று தடுத்தும். நீ நகருடி பற தேவடியா என்று சொல்லிக்கொண்டே சின்ன பொண்ணுவை சுவரில் தள்ளி போட்டு உள்ளான்.
அங்கிருந்த சிறுமியை கழுத்தின் பின் பகுதியில் அரிவாளால் வெட்ட முற்படும்போது "அண்ணா என்ன வெட்டாதே" " நான் ஒரு தப்பும் செய்யலை " என்று சிறுமி போட்ட சத்தம் மட்டும் கடைசியாக தாய் சின்னப்பொண்ணு காதில் விழுது உள்ளது. கேட்டு இருக்கிறாள் அப்புறம் சத்தமே இல்லையாம், சிறுமியை வெளியே இழுத்து வந்து போட்டுவிட்டு தலையை கையில் கொண்டு போய்விட்டானாம்,
இரவு சுமார் 7.30 என்பதால் இருட்டு வேறு. அதிர்ச்சி கலைந்து சின்னப்பொண்ணு அலறவும்தான் பக்கத்து வீட்டில் வசிக்கிற சாமுவேல் தம்பி குடும்பம் ஓடி வந்து முண்டமாக கிடந்த சிறுமி உடலை பார்த்து சத்தம் போட்டு உள்ளனர். கையில் தலையோடு போன காம கொடூரன் அவன் வீட்டுக்கு போய்விட்டு மீண்டும் வந்து ரோட்டில் தலையை போட்டு உள்ளான். பின்னர் தினேஷ்குமார் அவனது தம்பி சசி, அவன் மனைவி இரண்டு பெரும் அவனை ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
ஆத்தூர் டவுன் காவல் நிலையம் ஆய்வாளர் திரு கேசவன் அவர்கள் எதிரி மீது Cr.No. 547 of 2018 U/s 294(b), 302 IPC and Section 3(1) (r) (s) 3(2) (va) S.C/S.T (PoA) Amendment Act 2015 பதிவு செய்து சிறைப்படுத்தி உள்ளார்.
Reported By
Arumugam K.
Social Justice, Madurai - 17.
Cell ; 9442214254.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக