வெள்ளி, 19 அக்டோபர், 2018

என் டி திவாரி காலமானார் ..

திவாரி, காலமானார், காங்கிரஸ்,தினமலர் :புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி காலமானார். அவருக்கு வயது 93.
1925 அக்., 18 ல் பிறந்த நாராயணன் தத் திவாரி, 1984 - 85,1988 - 89 ஆண்டுகளில் உ.பி.,யிலும், 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்து உள்ளார். அமைச்சர் பதவி வகித்துள்ளார். இரண்டு மாநிலங்களில் முதல்வராக பதவி வகித்துள்ள பெருமைக்குரியவர். மாநில அரசில் பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். 1986 -87 ல் ராஜிவ் அமைச்சரவையில், வெளியுறவு, 2007 - 2009 ல் ஆந்திர கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். ஆரம்பத்தில் பிரஜா சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 1963 ல் காங்கிரசில் இணைந்தார். 1995 ல் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி துவக்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். உடல்நலக்குறைவால் டில்லியில் உள்ள சாக்கேட் மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிறந்தநாளான இன்று(18 அக்., 2018) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் ஆந்திராவில் ஆளுநராக இருந்த பொழுது பல பெண்களோடு பாலியலில் ஈடுபட்ட விடியோக்கள் வெளியானதால் பதவி விட்டு விலகினார். இவருக்கு இரகசிய குடும்பம் ஒன்று இருந்தது .முதலில் அதை மறுத்து வந்த பின்பு அதை ஏற்றுக்கொண்டு ரோஹித் என்ற இளைஞரை தனது மகன்தான் என்று ஏற்றுகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக