செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஓட்டுனர் விஜயகுமார் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்

மின்னம்பலம்:  பழனியில் அரசுப் பேருந்துகளின் நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியிட்ட
காரணத்துக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் விஜயகுமார், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
ஓட்டுநரின் சஸ்பெண்ட் ரத்து!
பழனியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் விஜயக்குமார். இவர் அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும், பேருந்துகளின் உண்மை நிலை என்ன என்பதையும் வீடியோ ஒன்றில் வெளியிட்டியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, நேற்று (அக்டோபர் 8) அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
போக்குவரத்து கழகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, இவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இன்று (அக்டோபர் 9) அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக