சனி, 13 அக்டோபர், 2018

சு.சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு :ஐயப்பன் கோயில் தேவசம் ஆணையத்தை கலைக்கவேண்டும்

tamil.news18.com :சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம்
போர்டை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.< சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.
தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி மற்றும் டிஜி மோகன் தாஸ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தொடர்பாக தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். சபரிமலை தீர்ப்புக்கு சுப்பிரமணிய சாமி ஆதரவாக கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக