வியாழன், 11 அக்டோபர், 2018

மகளை துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த தாய்.... தந்தையின் புகாரால் போக்சோ சட்டத்தில் கைது ,, தேனாம்பேட்டை

tamilthehindu :தேனாம்பேட்டையில் பெற்ற மகளையே அடித்து துன்புறுத்தியதாக தந்தை அளித்த புகாரில், போக்சோ சட்டத்தில் தாயை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் வசிப்பவர் செந்தில்குமார்(43). இவரது மனைவி பழனிபிரியா(42). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் தேனாம்பேட்டை காவல் நிலையம் வந்த செந்தில்குமார் தன் மனைவி மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதை படித்துப்பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதில், பெற்ற மகளையே தாய் பழனிபிரியா உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளித்திருந்தார். மேலும் இணங்க மறுக்கும் மகளை அடித்து காயப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கணவர் புகாரின் பேரில் மனைவி பழனிபிரியாவை போலீஸார் விசாரணைக்காக அழைத்தனர். ஆனால் அவர், கும்பகோணத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற தேனம்பேட்டை பெண் போலீஸார் தேவிகா, சரிதா ஆகியோர் பழனிபிரியாவை பிடித்து நேற்று சென்னை அழைத்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து சிறுமியை கொடுமைபடுத்தியதாக பழனிபிரியா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக