ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பேராசிரியர் அன்பழகன் அப்போலோ மருத்துவ மனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிமாலைமலர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
 இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக